Friday, October 27, 2023

ஷீனத்.-(வ.தாராயோ-சிறுகதை-7 )

 ஸீனத்

       வெள்ளிக்கிழமை ஊர்ப் பெரியபள்ளிவாயில் குத்பா பிரசங்கத்திற்குப் அந்தப் பிரச்சினை மறுபடி தொடங்கிற்று. சில இளைஞர்கள் கைகளில் துவக்குகளோடு வந்து கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல பள்ளித் தலைவருக்கும்ää தர்மகத்தா சபையினருக்கும் முடியவில்லை.  பள்ளித்தலைவர் சமாளிக்க முயன்றவராகக் கேட்டார்.

 

     மொதல்லயிரிந்து ஒளுங்காச் செல்லுங்கடா தம்பிமாரு.!  இது வவ்த்து நாம்பனெல்லாம் மறிப்படுற காலம்டா வாப்பாய்.!

 

     ஞ்சப் பாரு..! பள்ளிக்குள்ள கதைக்கக்குள்ள மறி அதுஇது ண்டல்லாம் கதக்கப் போடாத். இதொட முன்னூறு தடவ செல்லிட்டம். ப்பயும் செல்றம். காதியாரு ரோட்டுல இரிக்கிற சீனத்துää விபச்சாரம் செய்றாள் ண்டு பல தெடவ மொறப்பாடு குடுத்திருக்கம்.

 

     வௌச்சாரம் ண்டா என்னறாப்பா..வெளங்கல்ல.. வசனக்கட்டு.! -    குஞ்சி மரைக்காயர் கேட்டார்.

 

     அதுஉம் தெரியாதா..ஒங்கட பாசையில செல்ற ண்டால்ää அவள்ää  சீனத்து மாப்புள்ள புடிக்காள். வெளிநாட்டுக்கு ஊர்க்கட்டுப்பாட்ட மீறிப் போனாள். வவ்த்துலää  அறவிக்காரன்ட புள்ளயோட வந்தாள்.  அது காணாது ண்டு..  ப்பää ஊருல ஆம்புளயளக் கெடுக்காள்.  யிதுக்கு பள்ளியால ஒரு நடவடிக்கயும் எடுக்கிற ல்;லியா..இதான் கேளுவி.!

 

ஆயுதாரித்தலைவனின் இந்த படு நிர்வாணமான குரல் மற்றவர்களை வாயடைக்க வைத்தது. சில சமாதானவிரும்பிகள் இப்பிரச்சினையையும்ää அது கொண்டுவரப்பட்ட விதத்தையும் உள்ளுர வெறுத்தாலும்ää இளைஞர்களின் கைகளில் புதிதாக முளைத்திருந்த துப்பாக்கிகளுக்குப் பயந்து பேசாதிருந்தனர். தலை குனிந்திருந்தனர்.  சபை சற்று நேரம் சங்கடமான மௌனத்தில் உறைந்திருந்தது. பொதுமக்கள் சிலர் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். சங்கடமான அமைதியை பள்ளித்தலைவர் இருமிக் கனைத்துக் கலைத்தார். ஏதாவது சொல்லியாக வேண்டுமே..?

 

     அதுக்குச் சாக்கி இரிக்கா..ஆரு கண்ட ஆள்..?

 

     எதுக்குச் சாக்கி..?

 

     அதுக்குத்தான் .. சீனத்துர குத்தச்சாட்டுக்கு..?  சும்மாகிம்மா செல்லக் கூடா..  தம்பிமாரே..! நாலு பேரு கண்ணால கண்ட சாக்கி வேணும்.. சாக்கியும்ää சும்மா ல்ல.. தொளனும்.. ஈமானிசிலாம் தெரிஞ்ச ஆளாயிரிக்கணும். கால்ல செருப்புப் போட்டிருக்கணும்.. ஒளுங்கான ஆளா இரிக்கனும். ஆரு சாக்கி..?

 

சட்டங்கள் சபையேற ஆரம்பித்ததும்ää பொறுமையிழந்த ஒரு புதுப் போராளி முன்னே வந்தான்.

 

     டெää கௌட்டுப் பள்ளித் தலையா..! மாப்புள்ள புடிக்கறவள்  கதவத் தொறந்து வெச்சிட்டுää நாலு பேர சாக்கி  வெச்சிட்டா செய்வாள்..அதொட இவளுக்கு என்ன சாக்கியிம் மயிரும் கேக்குற..ஏன்.. ஒங்கட பள்ளி மரைக்கார் சபையில செல ஆக்கள் அங்க இடைக்கிட பதுங்குறது பெரிய சாக்கி ல்லியா..சாக்கி கேக்காரு கௌட்டு மரக்காரு..! சாக்கியாம்..!  ரெண்டுல ஒண்டச் செல்லுங்கடா கௌட்டு நாய்ஹளே..

 

     வாய மூட்றா..! மம்மக்காண்ட வளிசல்..!  சீனத்தப் பத்தின வளக்குல நீ மரக்கார்மார இதில இளுக்கப்பொடா.. செல்லிட்டன்.! ஓவ்..!

 

நீயானடா சாக்கி கேட்ட..!  குஞ்சி மரைக்கானுட்டக் கேளன். அங்கதானே போய்க் கெடக்கான்.. பொண்டாட்டி மௌத்தானதுக்குப் பொறகு..! அவனும் மரைக்கான்தான். அவனக் கூப்புடு! சாக்கிக்கு..

 

     நானெங்கடா போன.. அறாமி..?

 

     பொத்துரா வாய..

 

     இதுக்கு இப்ப என்ன முடிவு..அதச் செல்லு.!

 

     ஒத்தி வெய்க்கம்.!

 

     போன கௌமயும் ஒத்தித்தான் வெச்ச.!

 

     ன்னொரு கௌம பாப்பம். அவளுக்கும் ஒரு  பெராது குடுக்கனும்.  நீங்களும் சாக்கியோட வாங்க.

 

     நீங்கதாண்டா சாக்கியிம்.. ராவையில அவள்ள ஊட்ட படுக்கப்போகத் தெரியிம். சாக்கி செல்லத் தெரியாதா..?

 

     ஞ்ச ஒத்தரும் அவள்ட்டப் போஹயில்ல.. கதைக்கிற நீங்க  ஒளுக்கமான ஆக்களாடா..?

 

     ல்லல்ல..  நீ போனத்தக் கண்டதுக்குச் சாக்கி இரிக்கி.

 

     சாக்கியிம் மய்ரும்.! பே நாயே..!! வாப்பாட பேரு தெரியாத அறாமியள். பள்ளிக்க வந்து கசிலி பண்ணலாமாடா..?

 

     வாய்ய மூட்ரா குஞ்சி மரைக்கான்..! நீயெல்லாம் ஒரு பள்ளித் தலவரு. ஒனக்கெல்லாம் ஒரு தொப்பிää தாடி..  வட்டிக்கந்தன்! பொண்டாளன்!! நீயெல்லாம் பள்ளிக்கு தலவரா இருக்கலாம் எண்டாää மத்தாக்கள் இந்த மாதிரிக் கேஸெல்லாம் கேக்கப்போடாதா..?

 

     இவன மொதல்ல சுடணும்..

 

     லோட் பண்ணு.. சுடு.. சுடு..!!

 

     ம்மாமாருட்டச் சுட்ரான்..

 

பிரச்சினைத் தீக்குச்சியில் சூட்டுத் தீப்பொறி பறக்கää கைகலப்பு எட்டிப்பார்த்தது.  நிகழ்ந்த இழுபறியில்ää  சில உதைச்சத்தங்களும்ää அடிச்சத்தங்களும்..  கூட்டத்துக்குள் குழப்பமாகி ஒருவரையொருவர் நெட்டித்தள்ள.. சட்டெனää இளைய போராளித்தலைவனின் கையிலிருந்த துப்பாக்கி  வானத்தை முறைத்துப் பார்த்ததுää ஒரு குண்டைத் துப்பியது.

 

அந்தப் பயங்கரமான வேட்டொலிää தொலைந்து போன அமைதியை உடன் அழைத்து வந்தது.  தொடர்ந்து இளைய தலைவனின் குரல் ஒலித்தது.

 

     என்ன நடந்தாலும் செரி..! நாங்க செல்றத்தச் செல்லிட்டம். ந்த வேசையாலää ஊர் மானம் போவ்து. பள்ளியில ஒரு நடவடிக்கயும் எடுக்கல்ல. யிவளுக்கு மட்டையடி குடுக்காட்டி ஆண்டவன்ட தண்டன ஊர்ல எறங்கும். ந்தää மரைக்கான்மாரும்ää லெப்பமாரும்ää அவளுக்குத் தெண்டன குடுக்க மாட்டானுஹள்.  ஏனுண்டால்ää ராவைக்கி மொற வெச்சி அவள்ட்டத்தானே படுக்கப் போஹனும்.. இனி இதுக்கு எங்குட யியக்கம் தெண்டன குடுக்கும். வாறம்..! வாடா போவம்..!

 

புறுபுறுப்பும்ää முனகல்களுமாக கூட்டம் மெதுவாகக் கலையத் தொடங்கிற்று. புதிதாகத் துப்பாக்கி ஏந்திய இளைய தலைவனும்ää அவனது போராளிகளும்ää சனத்தை விரோதமாகப் பார்த்தபடியேää தமக்குள் சிங்களத்தில் பேசிக் கொண்டுää இரவலாகப் பறித்து வந்த மோட்டர்ச் சைக்கிள்களில் ஏறிப் பீதியும்ää புளுதியும் கிளப்பிப் பறந்தனர்.

 

(2)

 

      பள்ளிவாயிலில் நடந்ததை ஒன்று விடாமல்ää ஸீனத்திடம் சொல்லிக் கொண்டிருந்தார் குஞ்சி மரைக்காயர்.  ஆர்வமும்ää பயமுமாகக் கேட்டுக் கொண்டிருந்த ஸீனத்தின் முந்தானையின் நழுவல்களில்ää  மரைக்கார் ஆர்வமாகி கதையை இழுத்தடித்து ஆலாபனைகளுடன்  விளங்கப்படுத்திக் கொண்டிருந்தார்.

 

     என்ன..என்னச் சுட வெருவானுஹளா..?

 

ஸீனத்தின் நெஞ்சு பயத்தினால்ää காய்ந்து விட்டது. வெற்றிலைச் சாற்றைக் கூட்டி விழுங்கினாள். மார்பகங்கள் விம்மிவிம்மித் தணிந்தன.  பார்த்திருந்த மரைக்காரின் கண்கள் பிதுங்கின.

 

     சுடயா..ஒன்னயா..மைருக்க சுடுறான்.. சுட்டுப்போட்டு எங்க போற..நாங்க பள்ளி ஆக்கள் உடுவமா.. ராணுவம் பொலிசி உடுமா..?

 

     நெக்கிப் பயம்மாயிரிக்கி ஹாக்கா..! அவனுஹள் ஞ்ச என்ட உட்டயும் நாலஞ்சி தெரம் வந்து ஏசிட்டுப் போய்ருக்கானுஹள்.  யினி ந்த ஊர்ல நான் இரிக்க ஏலா..  திருப்பியும்ää சவ்திக்குத்தான் போப்றன்.  அவன் சப்பனுட்ட என்ட பாசிப்போட்டுää காசி எல்லாத்தையும் குடுத்துட்டன்.  காசி கொஞ்சம் கொறைது. ஓனக்குட்ட ஒரு அஞ்சாயிரம் எடுக்கலாமா மரைக்கான் ஹாக்கா..கடனாத் தெருவியா..?

 

காசு பற்றிய பேச்சு வந்ததும் குஞ்சிமரைக்கார் உஷாரானார்.

 

     அஞ்சாய்ரமா..பஃடியா பண்றாய்..அஞ்சி ஸதமும் ல்லை. அண்டக்கிம்ää ஒனக்கு ஒரு மூவாயிரம் என்ட பொண்டாட்டிக்கிம் தெரியாமத் தந்த.. அதயிம் ன்னம் திருப்பித் தெரல்ல. தந்த மூவாய்ரத்திக்;கு மூணு தெரமாச்சிம்... ல்ல.

 

     ஒனக்கு எந்நரமும் அந்த நெனப்புத்தான். நடுக்கடலுக்க போனாலும் நாய்க்கி நக்குத் தண்ணிர நெனப்புத்தானே.. என்னக் காப்பாத்துர வளியத் தேடாம என்ன ஹாக்கா கதக்காய்.. நீ..?

 

     செரிசெரி..! கோவிக்காத..! ப்ப என்ன செய்யப் போறாய்.. ?  ராவைக்கு டீச்சர்ர ஊட்ட போய்ப்படு.! ல்லாட்டிää என்ட கட அறைக்க போய்ப்படு.  ஊட்ட.. ஞ்ச படுத்துராத..! வளிசல்;கள் வந்தாலும் வெருவானுஹள்..

 

     செரி.. எதுக்கும் கடத் தொறப்பத் தந்துட்டுப் போ ஹாக்கா..!  எனக்கிப் பயமாயிரிக்கி..! மவ்த்தாகப் பயமில்ல. சீவன் எப்பயாச்சிம் போறதுதான். ஆனாää என்ட கொம்பளப் புள்ளய ஒருக்கா நான் பாத்திரணும்.  அதான் என்ட ஆசத்து.! அதுக்கு நீயான் காக்கா ஒதவி செய்யனும்..!

 

     ஒன்ட புள்ளயப் பத்தி நீ கவலப்பட வேணா சீனத்து.! அது காத்தாங்குடில கொம்புள அரவிக் கொலிச்சில ஓதுது.  மவ்லியாப் பொம்பிளயா வெரும்.  நான் என்ட சொந்தமகள் ண்டு செல்லித்தானே அதுல சேர்த்துட்ட..  மெய்யா மெய்யா எனக்கிட்ட மட்டும் செல்லுஹா.. அந்தப் புள்ளக்கி ஆருஹா வாப்பா..?

 

குஞ்சிமரைக்காரின் கேள்வி ஸீனத்தின் அடி மனதைத் தொட்டுவிட்டது.  சுமார் பத்து வருடங்களுக்கு முன்ää  சவுதிஅரேபியாவில்ää ஒரு கோடீஸ்வர வீட்டுச் சப்ர மஞ்சத்தில்ää வீட்டு எஜமானனின்ää பதினேழு வயது விடலை மகனுடன் படுக்கையைiயும்ää உடம்பையும் வலுக்கட்டாயமாகப் பகிர்ந்து கொண்ட நாட்கள்..  சிலிர்த்துப் போனாலும்ää சமாளித்துக் கொண்டாள் ஸீனத்.

 

     ச்சீää குஞ்சி மரைக்கான்..ää  பேக்கத கதையாம ப்ப ஊட்ட போ.! எனக்கி வேல இரிக்கி ஒரு கொள்ளயா..

 

     செரி.. நான் எழும்புறன். ! செல்றத்தச் செல்லிட்டன்.  கவனமாயிரி.!  ந்தா கடத் தொறப்பு.

 

(3)

 

குஞ்சி மரைக்காயர் போனதும்ää ஸீனத் துரிதமாகச் செயற்பட்டாள். அலுமாரிக்குள்ளிருந்தää பழைய கடவுச்சீட்டுää அடையாள அட்டைää பணம் இருபதினாயிரம் ரூபாய்ää ரெண்டு வளையல்கள் அனைத்தையும் எடுத்தாள்.  உள் பாவாடைக்குள் இருந்த பையுள் மறைத்;து அணிந்தாள். உடுபிடவைகளை வேறாக எடுத்தாள். பாதுகாப்பான ஒரு சவுதிப்பைக்குள் திணித்தாள்.  விரைவாகச் சாப்பிட்டு முடித்தாள். தன்னைப் பதினாறு வயதில் தவிக்க விட்டு காலஞ்சென்று விட்ட தன் தாயை மனதுக்குள் வைதாள். திக்குத்திசை தெரியாப் பருவத்தில் ஆதரிக்க ஆளின்றி.. அலைந்து.. ஓ..! எத்தனை காமுகர்கள்..! ஏழ்மையை விலை பேசியவர்கள்..! ஆதரிப்பாரின்றிää வயிற்றைக் கழுவ வெளிநாடு போய்..  பத்து வருடங்கள் உழைத்து.. கடைசியில்ää ஒரு சதமும் இல்லாது ஊருக்குத்  திரும்பி..

 

      ஒரு பெரிய சூட்கேஸினுள் உடுபிடவைகளை அது கொள்ளமட்டும் அடைத்துப் பூட்டினாள்.  சாவியை ஊசியில் கோர்த்துää கழுத்துச் சங்கிலியில் இணைத்து மார்புகளுக்குள் மறைத்தாள். புறப்படத் திரும்பினாள். உடன் திடுக்கிட்டாள்.

 

      ஒரு மாபெரிய தும்மலும்ää சிற்சில இருமல்களுமாகää குறிச்சி விதானையார் வீட்டுக்குள் நுழைந்து வந்தார். ஸீனத்தை உற்றுப் பார்த்தார். சுயாதீனமாக அங்கு கிடந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்தார். கதிரையின் இரு கைகளையும் பிரித்துää தன்னிரு கால்களையும் அவற்றில் தூக்கி அகலசகலமாகப் போட்டார்.  ஒரு பெண்ணின் அருகிலிருக்கின்றோம் என்ற எந்தக் கூச்ச சுபாவமும் இன்றி தன் பின்புறத்தைத் தூக்கி  நீளமான தொனியில்ää காற்றுப் பிரித்தார்.. பின் அதற்காக வெட்கமில்லாமற் சிரித்தார்.

 

     சீனத்துää  ஏய்..!  ண்டைக்கு பள்ளியில ஒண்ட மானம் கப்பலேறிச்சிப் போச்சி புள்ளே..ய்.. குஞ்சி மரைக்கான் வந்து எல்லாம் செல்லியிரிப்பானே..?

 

     ப்பான் செல்லிட்டுப் போறான். நீங்க குறிச்சி வெதானையா இரிந்தும் வேலயில்ல.  ஒங்குளயிம் சேத்துச் சுட்டுப்போட்ருவானுஹள்  ண்டு பயமா ஒங்களுக்கு..?

 

     மைருக்க சுடுவாரு..! எல்லாம் ஒன்னாலதான்.. நான் ஞ்ச வந்துபோறத்த வெச்சிட்டுää அவாண்டம் கதய்;க்கானுஹள்.. நான் வாற என்னத்துக்கு..பிச்சச்சம்பளம் தாறதுக்கு.. ஊடு வளவு பதியிறத்துக்கு.. அவன் என்னடா  ண்டால்ää  பள்ளித் தலவரா இருந்தா ஞ்சயெல்லாம் வெரப் போடாதாம்.. ஒன்னச் சுடனுமாம்..

 

     ஆர்ர மஹன் அவன் வெதான..சுடத் தேடித் திரியிறவன்..?

 

     சப்புச் செய்யதுர அறாங்குட்டி.! ன்னம் கொஞ்ச வளிசலுஹள்.. ப்ப  ஹோங்காட்டுப் படைக்கித் தலைவனாம். அறாமுல பொறக்கிக்கி சப்போட்டுக்கு அஞ்சாறு அறாமியள்.. அவஹளுட்ட தோக்குஹளும்ää கெரணட்டுகளும் பர்ர பாடு..! ப்ப இதுதான் அரசியல்.. எல்லாரும் இதுகள பாத்ட்டு இரிக்காஹ..

 

     பொலிசி புடிக்கற  ல்லியா..?

 

     பொலிசிதான் தோக்கும் குடுத்தயாம்.. எலங்கச் செலோன ஆரு ஆள்ற..ஜேயாரா.. ல்ல பெரவாஹரனா..அவன் அத்துலத்துமொதலியான்ää ஹோங்காட்டுப் படைய தொடங்கினயாம்.. அடுத்தமொற சனம் வோட்டுப் போடுமா..ஆன காட்டுக்க ஏறும்..

 

     கோப்பி ஊத்தித் தெரயா விதான..நான் விடிய கொழும்புக்குப் போறன்.. யூக்கேட லொச்சில நிப்பன். அப்பிடியே ஒரு கௌமையால  வெளிய போறன்.. சவ்திக்கி ல்ல. கொவதை;துக்கு.. புது எடம்..

 

     அதான் நெல்லது.!  யூக்கேட லொச்சி லான் நில்லு.!  நாளயண்டைக்கி நானும் கொளும்புக்கு வெருவன். ஏசிஏட கூட்டம் இரிக்கி. லொச்சிக்கி வெருவன்.

 

     காசியிரிக்கா விதான ஒரு அய்யாயிரம்..?

 

     செரி தாரன்.. காணுமா..முன்னயும் ஒரு அய்யாயிரம் தந்திரிக்கன்.  மொத்தம் பத்தாய்ரம்.! ன்னம் வேணுமுண்டாலும் கேளு.!  தாரன்.. மனிசனுக்கு மனிசன் ஒதவிதானே..

     ல்ல வேணா..! நீங்க எப்பிடியும் என்ட வளவுறுதிய  அமுக்குறத்துக்குத்தான் வளம் பாப்பீங்க.. அப்பிடிச் செஞ்சி போட்ராதீங்க.. ஏளக் கொமர்ர ஆதனம். இது..   இது ஒண்டுதான் என்ட மஹளுக்கு இரிக்கிற சொத்து. அநாதப் புள்ளட ஆதுனம்..

 

     போஹா பைத்தியாரி..! அது ல்ல.. நீ கொவைத்தக்குப் போய் செக்க அனுப்பினா  மத்தக் கய்ல உறுதியத் தெருவன். நீ ல்லாட்டி மகளுட்டக் குடுப்பன். நம்ம அப்பிடியான ஆள் ல்ல.

 

மகளின் நினைவு வந்ததில்ää ஸீனத் தடுமாறிப் போனாள்.  விழிகள் கலங்;கி கண்மயிர்கள் நனைந்தன. துன்ப உருண்டை மனதுக்குள் பொறுத்து தொண்டை கம்மியது.  சற்று நேரம் பாசப் பிணைப்பு தந்த பிடியில் சிக்கி செயலற்றவளானாள். பின் நாக்குளறிச் சொன்னாள்.

 

     ஆ.. அல்..லாதான் என்ட புள்ளயக் காப்பாத்தனும்.  நாங் கொஞ்சம் மரியாத கெட்ட பொம்புளதான். ஆனாää என்ட புள்ளய நெல்ல மானம் மரியாதயா வளத்திரிக்கன். மவ்லவிக்கு ஓதுறாள்.  ஒளுக்கமான புள்ளயளோட வாள்றாள். அந்தக் கொமர்ர ஆதினம் இது ஒண்டுந்தான்.  போனமொற சவ்திக்கிப் போய் வந்ததில ஒண்டும் மிஞ்சயில்ல. காசெல்லாம் பறிச்சிட்டு அவன் கறுமக்கார வொஸ்ஸி தெரத்தி உட்டுட்டான்..

 

     நெல்ல காலம்..! கல்லெறிஞ்சி கொல்லாம உட்டுட்டான்.  நீ அங்கயும் போய் வொஸ்ஸிர மஹனோட..

 

     ..ப்ச்சக்..! சொத்தர அசிலப் பாரு..! ஒன்னப் போல ஆக்கள் ப்பிடி வசதி இரிந்தும் என்ன ரெண்டாந் தாரமாச்சிம் கலியாணம் பண்ணிருந்தா.. எனக்கி ந்த ஊர்ல வாள்க்க குடுத்திரிந்தா நா ஏன் வெளிநாட்டுக்குப் போஹனும்..மானம் எளக்கணும்..த்தூ.. ந்த ஊர்ல ரோசமுள்ள ஆம்புள ஆரு..செல்லு..! குண்டி களுவ ஒரு அரிசிமணி தெர ஆள் ல்ல.. ஆனாப் பொண்டாளுறத்துக்கு எத்தினயோ பேரு ரெடியா யிரிக்காங்க.. தோக்குஹளோடத் திரியிற அறாமியளுக்கும் நான் படுத்தா செரி..  ல்லாட்டி சுடுவாஹ.. ரோசமத்த நாய்கள்.!

 

     செரி.. செரி..! எப்ப போறாய்.. நாளைக்கா..செரி.. காலத்தால ஊட்ட வா.. காசி தாரன்.. ராவயப்பாட்டுக்கு கொஞ்சம் கவனமா இரி. அறாங்குட்டிப் பட வந்தாலும் வெரும். எதுக்கும் டீச்சர்ர ஊட்ட போய்ப் படு..!  ல்லாட்டி குஞ்சிமரக்கான்ட கடைக்க படு..!

 

(4)

 

      அந்த ஊரின் அதிகாலை மிகப் பயங்கரமாக விடிந்திருந்தது. அதிகாலையின் கருக்கிருட்டில்ää ஊரின் கடற்கரையில்ää சனக் கூட்டம் அம்மித் திரண்டிருந்தது. மேலும் சனங்கள் கேள்விப்பட்டுக் கேள்விப்பட்டு வந்து குவிந்து கொண்டிருந்தது. குளிர் காற்று வேகமாக வீசிச் செவிகளை விறைக்க வைத்த போதும்ää  சனங்கள் அந்தக் கடற்கரையில்ää இதயத்தை விறைக்க வைக்கின்ற  ஒரு காட்சியைச் செய்வதறியாது பீதியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

      கடற்கரை மணல் மேட்டில்ää தோண்டப்பட்டிருந்தää ஒரு குழியில்ää சீனத்தின் உயிரற்ற உடல்ää நின்ற வாக்கில்ää நிலைக்குத்தாகப் புதைக்கப்பட்டிருந்தது. கழுத்து வரை மூடப்பட்டிருந்தது. தலைமுடி ஒழுங்கற்று மழிக்கப்பட்டுää மொட்டையடிக்கப்பட்டிருந்தது. முகமெல்லாம்  அடி காயங்கள்.. ஊதா நிறத் தழும்பேறியிருந்தன. வெட்டுக் காயத்தால்ää ஒரு கண் அகலத் திறந்து பிதுங்கியிருந்தது. ஸீனத்தும்மாவின் வாய் பிளக்கப்பட்டு அதனுள்ää அவளதுää கடவுச் சீட்டு சுக்கலாகக் கிழிக்கப்பட்டு திணிக்கப்பட்டிருந்தது. புதைக்கப்பட்டிருந்த கழுத்தினருகில்ää மணலில் இரத்தம் வடிந்து உறைந்து போயிருந்தது. சுற்றிலும்ää ஈக்கள் மொய்த்து மொய்த்துப் பறந்தன.. உடலுக்குப் பக்கத்திலேயேää ஒரு அவசர அறிவித்தல் பலகை ஊன்றப்பட்டிருந்தது.

 

விபச்சாரம் செய்த குற்றத்துக்காகää ஸீனத்தும்மா என்ற இவளுக்கு

உஹதுப் படை இயக்கத்தினால்ää இம்மரண தண்டனை விதிக்கப்படுகின்றது..

 

 

(5)

 

 

      ஒரு மாதத்தின் பின் வெளியானää அரசசபை விவாத அறிக்கையிலிருந்துää சில பகுதிகள்....

 

திங்கட்கிழமை 29 நவம்பர் 1988. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின்ää அரச சட்டவாக்க சபை கூடியதும்ää கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால்ää வினா விடுக்கப்பட்டுää ஏற்றுக் கொள்ளப்பட்டது.  திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. முத்துமுகம்மது அவர்கள்ää கௌரவää தேசிய பந்தோபஸ்த்து மற்றும் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்ட வினா.

 

(அ)  சீலைப்பள்ளியூரில்ää எனது ஆதரவாளரான ஒரு பெண்மணி அரச ஊர்காவல்படையினரால்ää மிருகத்தனமான முறையி;ல்ää கற்பழிக்கப்பட்டு துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவர் ஒரு முஸ்லிம் பெண்மணி என்றும் பாராது இக்கொடூரம் நிகழ்ந்துள்ளது. அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  இது அமைச்சருக்குத் தெரியுமா..?

 

சபையில் கூச்சல்.. குறுக்கீடு.. அது அரச படையினர் அல்ல..   உங்கள் ஜிஹாத் படையினர்..  முஸ்லிம் கொட்டியா.. 

 

(ஆ)  அப்பகுதிப் பொலிஸ் பொறுப்பதிகாரி மட்டில்லாத ஆயுதங்கள் மற்றும் சுடுபடைக் கலங்களை இளைஞரின் கைகளில் பொறுப்பில்லாமல் கொடுத்திருப்பதனை  அமைச்சர் அறிவாரா..ஆம் ஆயின்ää அது பற்றிய விபரங்களை வெளியிடுவாரா..இல்லையாயின்ää ஏன்என்று விளக்கமளிப்பாரா..?

 

பெருத்த கூச்சல்களுக்கு மத்தியில்ää கௌரவ அமைச்சர் பதில்:

 

         கௌரவää பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்ட சம்பவத்தில்ää ஊர்காவற்படையினர் எவ்விதத்திலும் ஈடுபட்டிருக்கவில்லை.  அது ஆயுதம் ஏந்திய தமிழ்ப்பயங்கரவாதிகளின் செயலாக இருக்கலாம். அல்லதுää இனங்களிடையேää மோதலைத் தூண்டிவிடää புதிதாக உருவாகியுள்ள இனவாதக் கட்சிகளின் செயலாகவும் இருக்கலாம்.  இது நீதி மன்றத்தில்.. ( பொய்..பொய்காரன்.. சபையில் கூச்சல் குறுக்கீடுகள்.. வார்த்தைப் பிரயோகங்கள்..) ..இது ஏற்கனவேää நீதி மன்றத்தில்ää பொலிஸ் விசாரனையில் இருப்பதால்ää அது பற்றி இங்கு பேசுவது  நீதிமன்றத்தினை அவமதிக்கும் செயல். மட்டுமல்லாதுää சபையின் சிறப்புரிமைகளை....

 

(பொய்...பொய்...  கூச்சல்.. குறுக்கீடு.. கௌரவ பாராளுமன்ற உறுப்பினரின் வெளிநடப்பு..)

 

சபை ஒத்தி வைப்பு.

 

(6)

 

சீலைப்பள்ளியூரில்  நிகழ்ந்தேறிய மூன்று நாள் ஹர்த்தாலின் பின் பொதுச்சந்தையில்..  ஒருநாள்..

 

     என்னடா.. மீன் வாங்கிட்டியா.. மினிஸ்டருட்ட நம்மட எம்பி கேட்டானே சுப்பர் கேள்வி..

 

     என்ன மயிர்க் கேள்வி கேக்குற..மினிஸ்டர்தான் ஒத்தடியா  செல்லி;ட்டானே..  இது ஜியாத்துப்பட செஞ்ச வேல யெண்டு.. அர்த்தால் போட்டுää மீன் நாறினதுதான் மிச்சம்..

 

     ஜியாத்துப் படத் தலவனா அவன்..?  ப்பிடி விட்டேத்தியாக் கதைக்கிறவனெல்லாம் மினிஸ்டருஹள்.. நம்முட நாட்டுல..

 

     ஜியாத்துப் பட    ல்லாட்டிää   அப்ப ஆர்ரா சீனத்தச் சுட்டுக் கொண்டு பொதைச்சவனுகள்..?

 

     உஹதுப் பட   செஞ்ச  எண்டுதானே நோட்டிஸில எளுதியிருந்துச்சி.  ஏப்பிடியிரி;ந்தாலும்ää  இப்பிடி இசிலாம் மார்க்கம் இவனுஹளுக்குச் சென்னயாமா..ஒரு ஈமானுள்ள நெஞ்சிரிக்கிறவன் இதச் செய்வானா..அல்லா  தந்த  உசிரப் பதறப்பதறப் பறிச்செடுக்க ஆருக்குடா உரிம இரிக்கி..?  சிங்குள அரசாங்கத்துக்கு இரிக்கா.. ல்லää  தம்ள் யியக்கங்களுக்கு இரிக்கா..ää  ல்ல ந்தக்  காளான்கூளான்  முஸிலிம் படைக்கி இரிக்கா..

 

     சத்தம்போடாத..!  சரி.. கதய உடு..! நம்மட வேலய நாம பாப்பம். ஊர்க்கத கதைக்கயும் வேணா..  கடக்கரையில கொண்டு பொதைக்கயும் வேணா...| 13மலேசிய நண்பன். 1989.4

 

 

 

No comments:

Post a Comment