மலர்வு: 74. உதிர்வு: 98.
“நிறுத்து.!” என்று அதிகாரத்துடன் தலைப்பு எழுதப்பட்டிருந்த பலகையில்ää கீழேää ‘சகளர்ரும் வகனத்தை வீட்டு இநங்கி வரவுழ்.. அருப்புவெளி விஷேசட அதிர்டிப் பணட.’ என்று ‘அழகு’ தமிழில் எழுதப்பட்டிருந்தää அறிவித்தல் பலகை நாட்டப்பட்டிருந்தது. அருப்பு வெளி விஷேட அதிரடிப்படையின் மினி முகாமின் தொடக்கத்தில்ää வலது பக்கம் சற்று ஒட்டினாற் போல் அமைந்திருந்ததுதான் நான் அதிபராக இருக்கும்ää அருப்புவெளி தமிழ் மத்திய மகா வித்தியாலயம்.
பதின்நான்கு ஆசிரியர்களும்ää முன்னூறுக்கு மேற்பட்ட மாணவர்களும் உள்ள இங்கு சசி ரீச்சர் ஒரு தொண்டர் ஆசிரியையாகத்தான் இருந்தாள். சசி ரீச்சர் நல்ல வடிவுதான். தும்புக் கூந்தலும்ää பளீர் பற்களும் இவளது விஷேட அம்சங்கள். இவளைப் பற்றிக் கேள்விப்படும் செய்திகள் அவ்வளவு கற்புபூர்வமாக இருக்காது. முக்கியமாக மதியழகன் மாஸ்டர் சசியைப் பற்றி ஒரு போதும் நல்ல செய்திகள் சொல்லவே மாட்டான்.
ஆசிரியர்களின் வரவு இடாப்பை நான் பரிசீலித்துக் கொண்டிருந்த போதுää மதியழகன் உள்ளே வந்தான். இந்நேரம் மதியழகனுக்கு நாலாம் ஆண்டுக்கு கணித பாடம் இருக்கும்.. குறுகிய விடுமுறை கேட்க வந்திருக்கிறானோ..? எனினும் படிப்பித்தலில் குறைபாடு வைக்க மாட்டான்.
‘அதிபர் ஸேர்..?’
நான் நிமிர்ந்து பார்க்கவில்லை. என் மேசைக்கெதிரேயிருந்த கதிரையில் சுவாதீனமாக அமர்ந்து கொண்டான். குரலைக் கொஞ்சம் செருமிய பின் சொன்னான்..
‘ஸேருக்கு விசயம் தெரியிமே..?’
‘உமக்கு இப்ப கணித பாடமெல்லே..?’
‘ஓம் ஸேர்.! வகுப்புக்குப் போகத்தான் போகிறேன்.. ஒரு முக்கியமான விசயம் கேள்விப்பட்டியளோ தெரியாது..’
‘ ............................................................’
‘நம்மட..ää ஸ்கூல்ல தொண்டராயிருக்கிற சசிரீச்சருக்கு ஸ்கூலுக்கு முன்னாலயிருக்கிற சென்ட்ரிபொயின்ற்றில காவலிருப்பானே.. அந்த ;எஸ்ரிஎப்’ பெடியன் ஒரு ஸாரி வாங்கிக் கொடுத்திருக்கிறான்.. ஸேர்..’
நான் உள்ளுரத் துணுக்குற்றேன். ஆனால்ää வியப்பை வெளியில் காட்டவில்லை. மதியழகன் இப்படி வார்த்தை ரொக்கட் லோஞ்சர்களை ஏவுவதில் சமர்த்தன். ஆனால்ää பெரும்பாலும் பொய் சொல்ல மாட்டான். எனினும் இக் ‘கோள்’ சொல்வதைக் கேட்க விரும்பாதவன் போல்ää முகத்தை வைத்துக் கொண்டேன்.
‘உதுக்கும் நாலாம் ஆண்டு கணித பாடத்துக்கும் சம்பந்தம் ஏதுமிருக்கிறாப் போல தெரியல்லையே மாஸ்டர்..’ அவனுக்கு வெறுப்பேற்படுத்துமாறு புன்னகைத்தேன்.
‘அதிபர் ஸேர்.. நீங்கள் ப்படி விதண்டமாகக் கதைக்கிறதெண்டால் நான் போறேன். ஆனா ஞ்ச ஒரு மாதமாகவே நடக்கிற கூத்துகள தெரியாதது போல இருந்தீங்கள் எண்டால்ää நானென்ன செய்ய..? சரி நான் போறன்..’
‘மாஸ்டர்..! என்ன வார்த்தை இது.. ம்..? கூத்துகள்.! இருந்தாலும் நான் அதில் அக்கறையில்லை. சசி ரீச்சரின்ர ‘பேர்சனல்’ கதைகளை கதைக்கிறதாயிருந்தா அது எனக்கு வேண்டாம்.. அதுகளைக் கேட்க நான் தயாரில்லைப்பு. என்ர பள்ளிப் பிள்ளைகளின்ர பாடவிதானங்கள்ள ஏதும் குறைபாடு இருந்தா அதை மட்டும் சொல்லுமன்..’
‘ஆனா என்னட்ட வெளியாட்களும் கேக்கினம்...’
‘என்னட்டக் N;கட்கயில்லை. பாடசாலை விசயங்கள அதிபருட்டயெல்லே கேக்கனும்..’
ஆயினும் உள்ளுர மதியழகன் இந்தக் ;கூத்துகளை’ சொல்லாமலே போய் விடுவானோ என்றும் பயமாக இருந்தது. எனினும் கொஞ்சம் இறுக்கமாகவே இருந்தேன். எனது மௌனத்தை விரும்பாத மதியழகன் கோபத்துடன் கதிரையைச் சத்தமாகப் பின்னுக்குத் தள்ளிவிட்டெழுந்து சென்று விட்டான்.. அடப்பாவி..! சொல்லாமலே போய்விட்டான்.. ஆயினும் பரவாயில்லை. சசிரீச்சரின் தனிப்பட்ட நடவடிக்கையை கண்காணிக்க மதியழகன் யார்.. அதைப்பற்றியெல்லாம் விசாரிக்க எனக்கேது அதிகாரம்..? அவளது தனிப்பட்ட நடவடிக்கைகளை பாடசாலையோடு சம்பந்தப்படுத்திப் பார்;க்க நான் துளியும் விரும்பவில்லை. அது எனது பாடசாலையின் நற்பெயரைப் பாதிக்காத போதுää அதுபற்றி எனக்கென்ன வந்தது..?
எனினும்ää சசிரீச்சரின் மீது எனக்கு கோபம் வந்தது.. இவளது கூத்துகளை அறியவும் எனக்கு ஆவலாயிற்று. என் கீழ் மனதின் ஆவலை விரட்டி விட்டுää ஐந்தாம் பாட வேளைக்கான மணியைக் கோபத்துடன் நீளமாக ஒலித்தேன். இவளைக் கூப்பிட்டு கொஞ்சம் எச்சரிக்கை செய்தாலென்ன என்று திடீரெனத் தோன்றியது.. மதியழகன் மாஸ்டர் பொய் சொல்கிறவனில்லை.. அதுதான் சரி.. அறைக்குள் இடாப்புக் கொணர்ந்த பையனிடம்ää சசிரீச்சரைக் கூப்பிட்டு அனுப்பினேன். இந்நேரம்ää நேர்ஸரி வகுப்பிலிருப்பாள்.. என்னவென்று எச்சரிப்பது..? எழுத்து மூலமாக ஒரு புகாரும் இல்;லாத போது..? ஆயினும்ää பாடசாலை நன்மைக்காக ஒரு பொய் சொல்வதால் ஒன்றும் பாதகமில்லை.
ஒரு இதமான வாசனை அறையெங்கும் பரவிää என் நாசியில் குடைந்தேறியது.. சட்டென நிமிர்ந்தேன். சசிரீச்சர்தான்.. உள்ளே வந்தாள்..
‘ஸேர்..! கூப்பிட்டனீங்களே..?’
நான் நிமிர்ந்து பார்த்தேன். அதேää இலயிக்க வைக்கும் கீற்றுப்புன்னகை.. பளீரிடும் வரிசைப் பற்கள்.. நெற்றியில்ää கண்ணீர்த் துளி வடிவத்தில்ää கறுப்புப் பொட்டு.. தும்புக் கூந்தல்.. கூர் மூக்கு.. ஒன்றல்ல ஆயிரம் சாரிகள் இந்தச் சிரிப்புக்காகவே கொடுக்கலாம்தான்.. ச்சீ.. என்ன கீழ்த்தரமாக நானும் எண்ணுகிறேன்.. என்று என் வக்கிர மனதை அடக்கினேன்..
‘இப்படி இரும் பிள்ளை..’
கதையை எப்படி ஆரம்பிப்பது என்றே புரியவில்லை.. இதையெல்லாம் கேட்கலாமா நான்..? நான் மௌனமாக ஆனால்ää பலத்த யோசனையுடன் என்னைத் தயார் செய்து கொள்வதற்காக ஏதோ எழுதுவது போலிருந்தேன்.. சசிரீச்சர்ää ஒன்றும் என்னைக் குழப்பாமல்ää என் மேசை மீதிருந்த உலகப் படத்தை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தாள்.. திடீரெனää
‘அதிபர் ஸேருக்கு வேலை போல.. நான் கொஞ்ச நேரம் கழித்து வரட்டுமா ஸேர்..?’
நான் சட்;டென நிமிர்ந்;தேன்.. என் கண்களில் நிச்சயம் கோபம் இருந்தது.. அதை மறைத்தபடி கண்ணாடியைக் கழற்றித் துடைத்தபடியேää ஆரம்பித்தேன்..
‘ஒரு ரீச்சரின் நன்னடத்தைதான் மாணாக்கருக்குக் கற்றுத் தரும் முதற்பாடம்.. இப்படி எங்காயிலும் படிச்சிருக்கிறீயே பிள்ள..?’
சசிரீச்சர் குழப்பமடைவாள் என்று எதிர்பார்ததேன் ஆனால்ää தெளிவாக என்னைப் பாத்தாள். கொஞ்சம் புன்னகைத்தாள்.. பின் சட்டெனச் சொன்னாள்..
‘மதியழகன் மாஸ்டர் இத என்னட்டயே நேராக் கேட்டிருக்கலாம் ஸேர்..!’
நான் சவுக்கடிபட்டாற் போலத் துணுக்குற்றேன். இவளுக்கு இந்த அணுகுமுறை பொருந்தாது.. சட்டென எனது வியூகத்தை மாற்றிää அவளைச் சற்றுக் கனிவுடன் நோக்கிää
‘சசி.. பிள்ள! உன்ர வயசில எனக்கும் மகள் இருக்கிறாள். ஓண்டு மட்டும் சொல்றன்.. கொஞ்ச நாளா நான் கேள்விப்படுற செய்திகள் அவ்வளவு ரசிக்கிற மாதிரி தெரியல்ல.’
‘அப்படியானால்ää ரசிக்கிற மாதிரியான செய்திகள் என்ன ஸேர்..?’
அவளது கேள்விச் சாட்டையில் சுருண்டு விட்டேன்.. என் வார்த்தைகள் வயதுக்குத் தக்கவாறில்லை என உணர்ந்தேன்.. ஆயினும்ää இனித் தயங்காமல்ää நேரிடையாக விசயத்தை எடுத்தேன்..
‘ஞ்சப் பாருமன்.. அதெல்லாம் வெளியில சொல்லற மாதிரியில்ல.. ஆனா நீ நம்மட ;ஸ்கூல் கேட்;’டுக்கு முன்னால இருக்கிற ;சென்றி’யில காவலிருக்கிற அந்தச் சிங்குள.....’
‘ஞா.. அத்தநாயக்க வைச் சொல்றீங்களா ஸேர்..?’
‘அந்தச் சிங்களவன்ர பேரெல்லாம் எனக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை பிள்ளை. ஆனா..’
‘அத்தநாயக்க வேதான் ஸேர்.. எனக்கு மஞ்சள் கலர்ல பூ டிஸைன் போர்டர் போட்ட ஸாரி வாங்கித் தந்தவன்.. அத்தநாயக்கவேதான் ஸேர்.. அவனுக்கென்ன.. ஸேர்?’
அவளது நேரடித் தாக்குதலால் நிலைகுலைந்த நான்ää கடும் கோபத்துடன்ää பார்த்தேன்.. ஆனால்ää சசிரீச்சர் சிரித்தாள்.. ஆனால்ää முகம் திடமாகவும்ää தெளிவாகவும் இருந்ததுää ஆச்சரியமாவிருந்தது. அவளது பெரிய வட்ட விழிகளில் எவ்விதமான கலங்கலும் இல்லை. நேராகவே என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘அத்தநாயக்க வுக்கு என்ன ஸேர்..?’
மறுபடியும் அவளது இந்தக் கேள்வியால்ää என் கோபம் உச்சத்தை அடைந்தது..
‘இதப்பாருமன்.. நீ ஸாரி வாங்கினாலென்ன.. ல்லாட்டா என்ன.. ஆனாää நீர் அடிக்கடி அந்தச் ;சென்றிபொயின்ற்’ அருக போறதாயும்ää அவனுட்ட நெருக்கமாகப் பேசிப் பழகுறதாயும்....’
‘மதியழகன் மாஸ்டர் சொன்னவரா ஸேர்..?’
நான் மறுபடியும் பளீரெனத் தாக்கப்பட்டேன்.. இந்தக் கேள்வியை நான் கொஞ்;சமும் விரும்பவில்லை. யார் சொன்னால் இவளுக்கென்ன.. சொன்ன விசயத்தை விட்டுää பேச்சின் போக்கைத் திசை மாற்றுகிற பச்சைக்… ச்சே..வேண்டாம்.. எனது இரத்த அழுத்த உடம்புக்;கு இந்த உச்சக் கோபம் கூடாது.. ஆயினும்ää முகத்தை இறுக்கமாக்கி அவளை உறுத்துப் பார்த்தேன்.
‘இதப் பாருமன் பிள்ள.. அனாவஸயமா யாரின் பெயரையும் குறிப்பிட வேணாம். ம்.. நீர் விரும்பியபடி விரும்புற ஆட்களோட கதையுமன்.. ஸாரி ஸாரியா வாங்கிக் குவியுமன். ஆனாää பாடசாலையின்ர நற்பெயரைப் பாதுகாக்கிற பொறுப்பு எனக்கு மட்டுமில்ல எல்லார்க்கி;ட்டயும் இருக்கணும்.. நீர் விரும்பியபடி இரும். ஆனாää இதுர பின் விளைவுகள நீர் ஒரு குமர்ப் பிள்ளையா இருந்து யோசிச்சுப் பார்க்கிறது நல்லது.. அது உன்ர பொறுப்புத்தான்.. அது மட்டுமில்ல நீர் ஞ்ச ஒரு தொண்டர் ஆசிரியைதான். நெனச்ச நேரத்துல உம்ம நிப்பாட்டவும் ஏலும். ப்ப நீர் போகலாம்..’
அதிபர் கர்வம் என்னுள் பூக்கää நான்ää எச்சரிக்கைப் பார்வையுடன் கண்ணாடியை அணிந்தேன்.
‘ஸே..ர்ää அத்தநாயக்க வைப் பற்றி உங்களுக் கொண்டும் தெரியாது.. அவ...’ அவளது குரலில் பணிவு வந்திருந்தது.
‘அந்தச் சிங்.. அவனப் பற்றி அறிய எனக்கொரு தேவையுமில்லை பிள்ளை. ப்ப நீர் போம்..’
‘சரி.. இதை மட்டும் சொல்லிட்டுப் போறன் ஸேர்.. அத்தநாயக்க சரியான அப்பாவி நாயக்க ஸேர்.. எனக்காகää சிங்களத்துலää ஒரு கவிதை எழுதித் தந்தவன்.. என்ர ‘நேஸரி’ப் பிள்ளைகளுக்குää சொக்லேற்றுகள் வாங்கித் தந்தவன்.. த..தங்கச்சியின்ர ;பேர்த்டே’யாம்..’
திடீரெனச் சத்தமாகச் சிரித்தாள்.. என் சொற்கள் அவளைத்; துளியும் பாதித்ததாகத் தெரியவில்லை. என் மார்பு ஆத்திரத்தால் துடித்தது. ஓஹோ.. விசயம் வெகு தூரம் போயிருக்கிறது.. இவ்வளவு செய்திருக்கும் அத்தநாய்க்க இவளை பங்கருக்குள் வைத்தே..? ச்சே.. என்ன மடத்தனமான கீழ்த்தரமான கற்பனை.. ச்சே..
‘சசி. உம்மப் போகச் சொன்னனான். மற்றது இந்தப் பாடசாலையின்ர நற்பெயரை..’
‘…பாதுகாப்பேன் ஸேர்..! ஸேர்.. நான் ஒண்டும் சின்னப் பிள்ளையில்லை.. ஒண்டு சொல்றன்.. அத்தநாயக்க ஒன்பதாம் எண்காரன்.. இள வயதில் அவனுக்குச் சாவு வரலாம்.. பாவம்..’ என்று மறுபடியும்ää சிரித்தபடியே சொல்லிவிட்டுää சட்டென எழுந்தாள். போகத் திரும்பினாள். நான் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்..
‘மதியழகன் மாஸ்டர் நாலாம் எண்காரர்.. வீண் குழப்பமான எண்ணங்கள் கொண்டவர்.. சந்தேகப் பிராணி.. நீங்கää ஆறாம் நம்பர்.. கறாறான ஆட்கள் ஆறாம் இலக்கக்காரார்கள்தான்..’
நான்ää அளவுகடந்த ஆத்திரத்துடன் திரும்பியபோதுää கலீரெனச் சிரித்தபடி சசிரீச்சர் திரும்பிப் படியிறங்கினாள். அவளது திண்ணென்ற பின்புறங்கள் நீண்ட பின்னலை தூக்கியடித்து விளையாடின.. ச்சே.. நான் ஆத்திரமும் அவமானமுமாகப் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.. அத்தநாயக்கவை மரத்தில் கட்டி வைத்து உதடு கிழியு மட்டும் உதைத்தேன்.. பற்றியிழுத்தபடி வீதிகளில் இழுத்தெறிந்தேன்.. அவனது துவக்கைப் பறித்து அவனது ஆணுடம்பில் சுட்டபடியேää அதிபரின் அறிக்கைப் புத்தகத்தை மூடிவிட்டு இடைவேளைக்கான மணியை ஒலித்தேன்.. இதற்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும்.
()
இன்றைக்கு புதிதாக மதியழகன் மாஸ்டர் கொண்டு வந்த செய்தி மிக ஆவேசப்படத்தக்கது. எனினும் இன்றைக்கு அவனை என்னால் கண்டிக்க முடியவில்லை. ஓய்வான பாடவேளையில் என்னைச் சந்தித்தான். தனது உளவுச் செய்திகளைச் சொன்னான். அவன் சொல்லச் சொல்ல எனக்கே இந்தச் செய்திகளில் மிகுந்த அக்கறை பிறந்தது. இவற்றில் எனது வயோதிப மனதின்ää வக்கிரங்களின் தீர்த்தல்கள் இருந்தனவா..?
‘அதிபர் ஸேர்.. நேற்று உவள் என்ன செய்தவள் தெரியிமே..?’
‘ம்ஹ்..?’
‘நேற்றுப் பள்ளிக்கூடம் விட்டுப் போனவள் நேரா வீட்ட போகயில்ல.. உந்த ~எஸ்ரிஎப் கேம்பு|க்குள்ள போனத்த என்ர ரெண்டு கண்ணாலயும் கண்டனான். நானும் வீட்ட போகாமல்ää ப்படிää ‘ஸ்டாப் ரூமு’க்குப் பின்னால ஒழிஞ்சு நின்று கொண்டு கவனிச்சனான். கன நேரமா வெளியில வரயில்ல.. பேந்து ஒரு மூண்டு பத்துக்கு அந்தச் சிங்களப் பெடியனோட சிரிச்சுக் கதச்சபடி வெளிய வந்தவள்.. அந்தச் ‘சீனா’ அவளச் சக்கிளில் ஏத்திக் கொண்டு குச்சவெட்டைக் காட்டுப் பக்கமாப் போனவங்கள்.. நான் பின்னால போகப் பயந்துட்டுää போகயில்ல. உவள் மோசமான பெட்டை எண்டு தெரியிம்தான்.. ஆனாää இந்தளவு மோசமானவளா இருப்பாள் எண்டு ..’
என் வயதையும் மீறி மனம் படபடத்தது. கேட்கவே சகிக்க முடியவில்லை. குச்சவெட்டைக் காட்டுக்குள்ள யாரும் அவ்வளவு லேசாப் போகவும் முடியாது. அதற்குள் இவளும் அவனும் மட்டும் போறதெண்டால்...? ச்சே! வயிற்றுக்குள் ஒரு குத்தீட்டியால்ää குடைந்தது போல வலி ஊடுருவி மறைந்தது.. மனது விறைத்துப் போய் விட்டது.. காட்டுக்குள்ளேயே...ச்சீ..
‘உவள ந்தப் பள்ளியவிட்டும் நிப்பாட்ட வேணும் ஸேர்.. தொண்டர்தானே.. ஒண்டும் பிரச்சினையில்லை. உவள்ர வேசைத்தனத்துக்கு நாம ஏன் உதவியா இருக்க வேணும்..? தொண்டரா இருந்தே ப்பிடியண்டால்ää ~பேமனெண்டா|வும் ஆயிட்டால்..?’
‘..ம்..?’
‘ந்தப் பள்ளிக்கு உவள் வாறபடியால்தானே ஸேர் ‘கேம்ப்’ பக்கமாப் போறவள். நாங்கள் நிப்பாட்டி விட்டால்ää சும்மாசும்மா ‘கேம்ப்’ பக்கம் போக படையினர் விடமாட்டினம்தானே..’
மதியழகனின் பேச்சிலிருந்த நியாயங்கள் என்னை யோசிக்க வைத்தன. எனக்கு ஒரு வேலையும் ஓடவில்லை. இதனை எவ்வாறு கையாளுவதென்றும் தெரியவில்லை. இதற்கொரு முடிவு கட்டியாக வேண்டும். எக்கேடாவது கெட்டுப் போகட்டும் விட்டுவிடேன் என்றது மனம். இல்லை விடக்கூடாது என்றது மற்ற மனம். ஏனிது.. ? என் நரைத்துப் போன ஆசைகளின் தூண்டுதலா..? அவள் மீதான என் நிறைவேற்ற முடியாத மெல்லிய ஆசைகளின் விஸ்வரூப வெளிப்பாடா..? மதியழகனைப் போலவே எனக்குள்ளும் ஆண்மைப் பொறாமையா..?
பாடசாலையின் ஒழுக்கத்தைப் பேணும் ஒரு உயரிய அதிபரின் ஒழுக்காற்று நடவடிக்கையாக இதனைக் கையாள்வது என்று தீர்மானித்தேன்.. இது பொய்தான். ஆனால்ää மெய்யும்தான். தலை விண்ணென்று வலித்தது. ஒரு பிளேன்ரியும் சிகரெட்டும்ää குடிக்க வேணும் போலிருக்கவேää (அபூர்வமாக யாருக்கும் தெரியாமல் புகைப்பதுண்டு) மெதுவாக எழுந்து பாடசாலை வளவைக் கடந்து கண்காணியின் பெட்டிக்கடைப்பக்கமாக நடந்தேன். மனம் போர்க்களமாயிருந்தது.
()
நான் திரும்பி வந்து எனது அறைக்குள் அமர்ந்த போதுää ஆச்சரியப்படுமாறுää ஒரு பேப்பர் கோரிக்கை என் மேசை மீதிருந்த கண்ணாடியின் கீழ் வைக்கப்பட்டிருந்தது. எடுத்துப் பார்த்தேன். ஓர் ஆசிரியையின் ஒழுக்கக்கேடுகள் என்று தலைப்பிடப்பட்டிருந்தது. யார் வைத்திருப்பார்கள் இதை..? எடுத்து ஆர்வமாக வாசித்துப் பார்;த்தேன். சரிதான்..... சசிரீச்சரின் ஒழுக்கக்கேடான நடவடிக்கைகள் பட்டியலிடப்பட்டிருந்தன. அதன் அடியில்ää
“..........எனவேää இவரை இப்பாடசாலையிலிருந்து உடனடியாக நீக்குமாறு வேண்டுகிறோம். இப்படிக்குää தங்கள் உண்மையுள்ள..” பதினொரு ஆசிரிய ஆசிரியைகள் ஒப்பமிட்டிருந்தனர். இனி இதற்கொரு முடிவு காண வேண்டிய நேரம் வந்து விட்டது. இக்கடிதக் கோரிக்கையின் பின்னணியில் நிச்சயம் மதியழகன் மாஸ்டர்தான் இருந்திருப்பான். நான் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன். சசி ரீச்சரை நீக்குவதென்பது ஒரு செக்கனில் செய்யக் கூடிய அதிகாரம் எனக்கு இருந்தாலும்ää அவளைää நியமனம் செய்யச் சிபார்சு செய்த ‘பெரியஇடம்’ பற்றி எனக்குத் தயக்கமாகவிருந்தது.
அச்சமயம்ää தபாற்சேவகன் சில கடிதங்களைக் கொணர்ந்தான்.. எல்லாம் வழமையான கல்விச் சுற்றிக்கைகள்தான். ஆனால்ää ஒரு கடிதம் மட்டும் வித்தியாசமான முறையில்ää எனது சொந்தப் பெயர் எழுதி விலாசமிட்டிருந்தது. முத்திரையும் ஒட்டப்படாதிருந்தது. இந்த அனாமதேயக் கடிதத்திற்குää இரட்டைக் கட்டணம் கட்டிப் பெற்றுக் கொண்டேன். பிரித்துப் பார்த்தேன். உள்ளே ஒரு வெள்ளைத் தாளில்ää ஒரு பெண்ணின் கோரமான நிர்வாணப் படம் கைகளால் வரையப்பட்டிருந்தது. பக்கத்தில் ஒரு துப்பாக்கி.. மறுபக்கத்தில் அம்பு. கீழேää ;டும்.. சசி டீச்சரின்.....க்குள் டும்.. உடனே விரட்டி விடு. இல்லாவிட்டால்ää உனக்கும் டும்..டும்..’
நிச்சயமாக இத்தபாலை மதியழகன் மாஸ்டர் எழுதியிருக்க மாட்டான். அவன் யதார்த்தமானவன். இது பாடசாலைக்கு வெளியேயான வேறொரு ஒரு அதிபுத்திசாலியின் வேலையாக இருக்கும். சரி.. இனி நான் தாமதிக்க முடியாது.. இதற்கொரு தீர்க்கமான முடிவு கட்டியேயாக வேண்டும். விலக்கி விடுவதா..? இந்த மொட்டைக் கடிதத்துக்குப் பயந்தா..? அல்லது ஆசிரியர்களின் கோரிக்கைக்கு அடிபணிந்தா..? இதற்கெல்லாம் இடம் கொடுப்பதா.. எனது நிர்வாகம் பிழையா..? எதற்கும்ää கடைசியாகää சசிரீச்சருக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்க்கக் கூடாதா..? இன்று பாடசாலையை ஒரு மணிநேரம் முன்னதாகக் கலைத்து விடவும்ää அந்நேரத்தில்ää ஆசிரியர் கூட்டம் கூட்டவும் முடிவு செய்தேன். அதற்கு முன் சசி ரீச்சரைக் கூப்பிட்டு அனுப்பினேன்.
அவளைக் கூப்பிடப்போன மாணவன் மட்டும் திரும்பி வந்தான்.
‘எங்கடா மனேää சசிரீச்சர்?’
‘ரீச்சர் ஒரு இடமும் காணல்லை ஸேர்.. கேம்ப் பக்கம் போனவ எண்டு பிள்ளைகள் சொல்லிச்சு ஸேர்..’
என்னது.. பாட வேளையிலுமா.. என்ன மானம் கெட்ட வேலை இது.. எனக்குள் ஆத்திரம் கட்டுமீறிப் பிரவாகித்தது. இனியும் இவளை இங்கு வைத்திருப்பதா..? என் மனதின் ஓரத்தில் ஊறிக் கொண்டிருந்த ஒரு இறுதிச் சொட்டுக் கருணையைக் கூட இந்த நடத்தை உலரச் செய்து விட்டது. முகாம் பக்கம் போனாளோ.. அல்லது இக்கோரிக்கைகளை அறிந்துää அவமானத்துக்கஞ்சி வீட்டு;க்குப் போய் விட்டாளோ..? எப்படியும்ää என்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் அவள் போய்விட்டபின் இனி என்ன வேண்டிக் கிடக்கிறது..?
அன்று பாடசாலை கலைந்து ‘ஸ்டாப்; மீற்றிங்’ முடிந்த போதும்ää அவள் திரும்பி வரவி;ல்லை. கூட்டத்தில்ää எடுக்கப்பட்ட இவளை உடன் பாடசாலையிலிருந்து நீக்கும் முடிவுக்கு ஏக மனதாக அங்கீகாரம் கிடைத்தது. ஒருவர் கூட எதிர்க்கவில்லை. (என் மனதைத் தவிர).
()
அடுத்தநாள் வேலை நீக்கக் கடிதம் என் மேசை மீது தயாராகவிருந்தது. அவளைச் சிபார்சு செய்திருந்த பெரிய இடத்திலும் விசயத்தைத் தெரிவித்து ஒப்புதல் பெற்றுக் கொண்டேன்.. இப்போது அவள் வந்ததும்ää இன்று வகுப்புக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது.. ஆசிரியர் வரவு இடாப்பை என்வசம் வைத்துக் கொண்டேன்.. சிலவேளை இதனைக் கேள்விப்பட்டிருந்தால்ää அவள் வரவே மாட்டாள். வராவிட்டால்ää அவளது வீட்டுக்கே கடிதத்தைப் பதிவுத் தபாலில் அனுப்பிவிட இருந்தேன்.
நான் ஓரளவு எதிர்பார்த்தது போலத்தான் நடந்தது. சசி ரீச்சர் வரவில்லை. அன்று மட்டுமல்ல.. அதன் பிறகும் அவள் வரவில்லை. விடுமுறைக்; கடிதமோ அல்லது எவ்வித அறிவித்தலுமோ அவளிடமிருந்து வரவும் இல்லை. எனவேää அவளதுää வீட்டுக்கு தபாலில் கடிதத்தை அனுப்பி விட்டுää அதன் பிரதியை இருஉயர்வகுப்பு மாணவர்களிடம் கொடுத்துää அவளது வீட்டுக்குச் சென்று நேரிலும் கொடுக்கச் சொல்லியனுப்பி வைத்தேன்.. அம்மாணவர்கள் திரும்பி வந்துää சசிரீச்சர் வீட்டிலும் இல்லையென்றும்ää அவள் ஏதோ வேறு ஒரு வேலைக்கான நேர்முகப் பரீட்சைக் கடிதம் பெற்று கண்டிக்குச் சென்று விட்டதாகவும் தகவல் சொன்னார்கள்.
கண்டிக்கா சென்று விட்டாள்..? ஒரு வேளை அந்த அத்தநாயக்க வுடன் ஓடி விட்டிருப்பாளோ..ஆனால்ää சிலவேளைகளில்ää அத்தநாயக்கவை காவல் முன்னரங்கில் கண்டதால்ää மனம் சற்று நிம்மதியாயிருந்தது. சிலவேளை அவள் முகாமுக்குள்ளேயே இருக்கலாம் என்ற மதியழகனின் கூற்றை நான் கண்டிப்புடன் நிராகரித்துவிட்டேன்.
எப்படியோ சனி தொலைந்தது என்று நான் இப்பிரச்சினையைக் கைகழுவி விட்டேன். அதன் பின் நாங்கள் சசிரீச்சருக்குப் பதிலாக வே நபரை நியமனமும் செய்தாகி விட்டது. கண்டிக்குப் போன சசி தான் அங்கிருந்து கொழும்புக்குச் சென்றுää கனடா தூதுவராலயத்தில்ää விஸாவுக்கு விண்ணப்பித்துää அடுத்த வாரமே புறப்படவுள்ளதாகவும்ää சசிரீச்சரின் அம்மா விடமிருந்து மதியழகன் தகவல் கேட்டு வந்து சொன்னான். விசர்ப்பெட்டை மீது ஒரு மகள் போல நான் வைத்திருந்த பாசத்திற்கு ஒரு சின்னத் தகவல் கூடத் தெரிவிக்காமல் போய்விட்டாள். நன்றிகெட்ட நாய்.. அதன் பின் அவளை நாங்கள் எதிர்பார்க்க ஒரு காரணமும் இருக்கவில்லை. சில நாட்கள் கழித்துää காவலரணிலிருந்துää அந்த அத்தநாயக்க என்னிடம் மிக்க மரியாதையுடன்ää வந்து சசியைப் பற்றி விஸாரித்தான். நான் பிடிகொடுக்காமல் அவனுக்குப் பதில் சொல்லித் துண்டித்து வி;ட்டேன். ஆனால்ää அவன் வெகு நாட்களாக அவளை விஸாரிப்பதிலேயே தன் காலத்தைக் கழித்து வந்தான். பின் அவனும் ஏமாற்றத்துடன் ஓய்ந்து போய் விட்டான்.
()
அருப்புவெளி விஷேட அதிரடிப்படை மினிமுகாம் திடீரெனத் தாக்கப்படும் வரை எமக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. எதிர்பாராத ஒரு நள்ளிரவில் அது நிகழ்ந்தது. முக்கால் மைலுக்குள் நாங்கள் இருந்ததால்ää அந்த நள்ளிரவில்ää பக்கத்துக் கிராமங்களுக்குள் ஓடிச்சென்றோம். வெடிச்சத்தங்கள் வெகு தூரம் வரை கேட்டன. ஆனால்ää விடிகாலை ஐந்து மணியிலிருந்து எந்தச் சத்தமும் கேட்கவில்லை. எவரும் வெளியில் தலை காட்டவுமில்லை. இடையிடையே இராணுவ வானூர்தி ஒன்று உறுமி உறுமிப் பறந்தாலும்ää மினிமுகாமிலிருந்து ஒரு எதிரொலி கூடக் கேட்கவில்லை. யாரும் அங்கு உயிருடன் எஞ்சியிருந்ததாகவும் தெரியவில்லை. என்ன நடந்ததோ தெரியாது. நாங்கள் யாரும் இரண்டு நாட்கள் அருப்புவெளிப் பக்கம் வரவுமில்லை. அதிசயமாகää இராணுவமும் வரவில்லை.
நாங்கள் பயமின்றி வெளியில் சற்று நடமாட முடிந்தது. எனது பாடசாலையின் கதி பற்றி சொல்ல முடியாதிருந்தது. நொறுங்கித் தூளாகியிருக்குமோவெனப் பயமாகவிருந்தது. எனவேää நான்ää மதியழகன் மாஸ்டரின் வீட்டுக்குத் தகவல் அனுப்பிää அவன் வந்தவுடன்ää இருவரும்ää தேவையான முன்னெச்சரிக்கைகளுடன்ää அருப்புவெளிக்கு பொடி நடையாகச் சென்றோம்.
எமது பாடசாலை வெளியிலிருந்து பார்க்கும் போது எச்சேதமுமின்றியிருப்பது போலத்தான் தெரிந்தது. ஆனால்ää முன்சுவர் வெடித்துப் பிளந்திருந்தது. கூரைகளில்ää ஆங்காங்கே சிற்சில உடைசல்கள் தெரிந்தன. வேறு பெரிய பிரச்சினையில்லை. உட்சென்ற போதுää முன்வகுப்பறைக் கூடம் துப்பாக்கிச் சன்னங்களால்ää ஆயிரக்கணக்காகத் துளையிடப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது.. எனினும்ää ஒரு கட்டிடம் கூட உடைந்திருக்கவில்லை. தளபாடங்களிலும்ää பொருட்களிலும்ää பெரிய சிறிய பொத்தல்கள் தவிர பெரிதாக சேதங்களைக் காணவில்லை.
ஆனால்ää எதிரேää தாக்கியழிக்கப்பட்ட மினிமுகாம்ää சிதறிச் சிதிலமாகிக் கிடந்தன. இன்னும் மிகுதியாகää வெடிக்காத பொருட்கள் கிடந்து வெடிக்கலாம் என்ற அச்சத்தில்ää நாங்களிருவருவரும் முகாமுக்குள் செல்லாமல்ää பாடசாலைச் சுற்றயலிலேயே சுற்றிச் சுற்றி நடந்து பார்வையிட்டோம். மினிமுகாமின்ää கூரைகள் பிய்ந்து தொங்கின. காவலரண்களும்ää கட்டிடங்களும் நொறுங்கித் தூக்கி விசிறப்பட்டிருந்தன. அதிரடிப்படை வாகனங்கள் இரண்டும் கருகிப் போய் வெறும் இரும்புச்சட்டங்களாக உருகிக் கிடந்தன. சுருட்கம்பிகளும்ää மண்மூட்டைகளும்ää பெரிய பெரிய பனைமரக் குற்றிகளும் தாறுமாறாக உழக்கப்பட்டுக் கிடந்தன. முற்றத்தில்ää குளிர்பானப் போத்தல்களும்ää பருப்பு முட்டைகளும் சாப்பாட்டுப் பாத்திரங்களும்ää சில ‘ரீஷேர்ட்’டுகளும்ää காற்சட்டைகளும் குழப்பி விசிறப்பட்டிருந்தன. இராணுவ உறை அணிந்த சில மெத்தைகள் கைவிடப்பட்டுக் கிடந்தன. பிணங்கள் எதையும் காணவில்லை. முகாம் படையதிகாரியின்ää விசுவாசமுள்ள பெரிய கறுப்பு நாய் மட்டும்ää மல்லாந்து கால்களை வானத்தை நோக்கி நீட்டியபடி நாக்கிழுபட்டுப் போய்ச் செத்துக் கிடந்தது. சுற்றிலும் சிற்சில இடங்களில்ää இரத்தக் கறைகள் தோய்ந்து காய்ந்து போய்க் கிடந்தன.
அந்தச் சுற்றுப்புறத்திலேயேää ஒரு ஈ காக்காய் இல்லை. இந்த வெற்றுச் சூழலேää மிகவும் பயமுறுத்தியது. இரண்டொரு நாய்கள் விரோதமாக எங்களைப் பார்த்துக் குரைத்தன. தாக்கியவர்கள் தமது வேலையைக் கச்சிதமாகச் செய்திருப்பது தெரிந்தது.
பாடசாலை முன்முகப்பருகே இருந்த காவலரன் அருகே நாம் வந்தோம். எனக்கு திடீரென அந்தää அத்தநாயக்கவின் நினைவு வந்தது.
‘மாஸ்டர்! இந்த இடத்திலயெல்லோ உவன் அத்தநாயக்க காவலிருந்தவன்..?’ என்று பின்னால் வந்து கொண்டிருந்த மதியழகனைக் கேட்டேன்.
அவனது நிலைமை என்னவாயிருக்குமென்பது தெரிந்ததுதான். பாவம்.. இளம்வாலிபன்.. ;அத்தநாயக்க ஒன்பதாம் எண்காரர் இளவயதில் சாவு வரலாம் ஸேர்’ அட சசிரீச்சரை ஏன் மறந்தேன்.. இதனை அறிந்தால் வேதனைப்படுவாள்.. ;அத்தநாயக்கவுக்கு ஒரு கால் ஊனமான தங்கச்சி இருக்கு ஸேர்..’ இவனது துர்மரணம் அவளை மிகவும் பாதிக்கலாம்.. ;நேஸரி’ப் பிள்ளைகளுக்கு ;சொக்ளேற்’ வாங்கித் தந்தவன் ஸேர்..’ பாவம் அத்தநாயக்க.. எனக்கு முதன்முதலாக அத்தநாயக்க மீது பரிதாபம் எழுந்தது. என் இரண்டாவது மகனின் வயதுதான் அவனுக்குமிருக்கும்.. சிங்களக் கிராமத்து ஏழைப் பெடியன்தானே.. சம்பளத்துக்காக போர்த் தொழில் செய்;ய வந்தவன்.. தங்கச்சிக்காக சம்பாதிக்க.. தமிழரைக் கொல்ல அல்லவே..?
நான் கேட்டதற்கு மதியழகனிமிருந்து பதிலேதும் வரவில்லை. நான் பின்னால் வந்து கொண்டிருந்த மதியழகனைத் திரும்பிப் பார்த்தேன்.. அவனைக் காணவில்லை. ஒருகணத்தில்ää நெஞ்சு திடுக்கிட்டது. எங்கே இவன்..? ஆனால்ää சட்டெனää மதியழகன் என் பார்வையில் தட்டுப்பட்டான். அவன் தூரத்தே பாடசாலையின் வெளிப்புறச் சுவரையே மிக்க கவனத்துடன் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. நான் அவனை அழைத்தபடியே அருகே சென்றேன். வெளிப்புறச் சுவரில்ää பெரிதாக ஒட்டப்பட்டுத் தெரிந்தää ஒரு சுவரொட்டியைத்தான் அவ்வளவு கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது முகத்தில் தெரிந்த பீதியையும் கலவரத்தையும் கண்டு நானே பயந்து போனேன். சுவரொட்டியைப் பார்த்தேன்.
“வீர அஞ்சலி;.!” என்ற தலைப்பு. கீழேää ஒரு பெண்ணின் பூரண இராணுவச் சீருடையணிந்த மார்பளவுப் படம். இருபக்கங்களிலும்ää மலர்களும்ää குத்துவிளக்கும். மற்றும்ää புலித் தலைச் சின்னமும். அதன் கீழேää பெரிய எழுத்தில்ää இரண்டாம் லெப்டினன்ட். தமிழ்விழி. மலர்வு: 1974. உதிர்வு: 1998. அருப்புவெளி வீரப்புதல்வி தமிழ்விழியின் கனவுகளை நனவாக்குவோம்.’
என்னது..? மூக்குக்கண்ணாடியை அவசரமாக அணிந்து கொண்டுää மறுபடி அந்தப் பெண்ணின் முகத்தை உற்று நோக்கினேன். அது தமிழ்விழி என்ற சசிரீச்சரின் புகைப்படம்தான். ஒரு இரண்டாம் நிலைப் படைத்தளபதிக்கான தொப்பி அவளது தும்புக் கூந்தலை மறைத்திருந்தது. தொப்பியில்ää புலிச்சின்னமும்ää ஒரு நட்சத்திர அந்தஸ்தும் இருந்தன. முகத்தில் சிரிப்பு இல்லை. ஒரு இறுக்கமான கண்டிப்பு கண்களில் குடியிருந்தது. தோள்களிலும். இரு வீர அடையாளங்கள் இருந்தன.
நான் பேயறைந்தவனைப் போல மிரண்டு போய் மதியழகனைப் பார்த்தேன். மதியழகனின்ää கண்களில் மரணபயம் தாண்டவமாடியது. வெளிறிப் போய் என்னைப் பார்த்து விழி பிதுங்கினான். இருவரும்ää ஏதும் பேச வக்கற்றுப் போய்ää மௌனமாகத் திரும்பி நடந்தோம். வேறன்ன செய்ய..?
இலங்கைää பேராதனை பல்கலைக்கழகத்தின் தமிழ்ச்சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற கதை.கீதம். 1998
No comments:
Post a Comment