Friday, October 27, 2023

அணிலே,அணிலே ஓடிவா-(வ/தாராயோ..-சிறுகதை-1)

 அணிலே,அணிலே ஓடிவா

 

       அலிகன்;முல்ல அஞ்சல் அலுவலகம் அமைந்திருந்த பெரிய வளவின் முற்றத்தில் பிரமாண்டமாக வளர்ந்திருந்தது மருதமரம் ஒன்று. அதன் பக்கக் கிளையிலிருந்த பொந்தக்குள்ளிருந்து நாளைக்கு கொல்லப்படவிருந்த அந்த அணில்குஞ்சு எட்டி எட்டிப் பார்த்தது. ~~கிச்..கிச்||ன்று கத்தியது. திடீரெனத் தாவி மறுகிளைக்குக் குதித்தது.  கீழே குறுகுறுவெனப் பார்த்தது.  அதன்பஞ்சு வால் ஆடிக்கொண்டேயிருந்தது. தன் எஜமானான  தபாற்சேவகன் இந்திகவைத் தேடிக் கொண்டிருந்தது.

 

      அஞ்சல் அலுவலகத்தினுள் அவசரஅவசரமாகத் தபால்பை கட்டிக் கொண்டிருந்த  இந்திகவின் காதுகளில்  ~~கிச்..கிச்||சென்ற  சத்தம் கேட்டதும்  விரைவாக வெளியே வந்தான். அவன் மரத்தினடியில் வந்ததும் அணில் ~கிச்|சென்ற சத்தத்துடன் அவனது தோளில் பாய்ந்தது.

இந்திக அதன் முதுகைத் தடவிக் கொண்டு அதனிடம் ஏதேதோ சொல்லிக் கொணடிருந்தான். பலமாத காலமாக இந்த விசித்திர உறவு தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

 

      அஞ்சல்அலுவலகத்தினுள்ளிருந்து  யன்னலூடாக விநோதமாகப் பார்;த்துக்கொண்டிருந்த நஸீர்.  ஒர் உதவித்தபால்அதிபர்.. இந்திகவைக் கூப்பிட்டான்.

 

~~இனி..இந்திக அணில் இண்டைக்கு  என்ன சொல்லிற்று..?|| நஸீர்கேட்டதும் இந்திக சிரித்து-

 

~~பவ் மஹத்தயா.. தவஸ் தெக்கஹிந்த கொல்லாட்ட தரஹவெலா மாத்தெக்க.. அய் தன்னவாத..மெ பேரக்கெட்டியக்  துன்நேள்ளு மங்...|| (பாவம் மஹத்தயா.. அதுக்கு ரெண்டு நாளாக கோபமாம் என்னோட.. ஏன் தெரிமா.. கொய்யாப்பழம் கொடுக்கயில்ல நான்..) என்று சிரித்தான்.

 

~~ஹரி..ஹரி.. லொக்கு மஹத்தயா ~செக்கரண்ட எனவா.. ~டக்|காலா மெயில் எக்க வஹண்டகோ..|| (பெரிய ஐயா ~செக்|பண்ண வெருவாரு.. கெதியா மெயிலைக் கட்டு)

 

      அச்சமயம் பெரிய தபாலதிபர் வினாயகமூர்த்தி ஐயா உள்ளே வந்தார்.  ஊர் கோப்பாய்.    இந்தச் சிங்களக் கிராமத்தில் ஆறு வருடங்களாகக் கடமை செய்து வருகிறார். சிங்களம் தளதண்ணி மனிசருக்கு. நஸீருடன் மட்டும் தமிழில் கதைப்பார். கூட நஸீருடன் இந்திகவும் இருந்தால் சிங்களம்தான்.. (அவன் தப்பாக நினைத்துக் கொள்வானாம்.)

 

~~தம்பி..நஸீர்... சரியா எட்டரைக்கெல்லாம் ~மெயில்பஸ்வந்திடுமடா மோனே....  முடிஞ்சிருமோ.?||

 

~~ம்..ஐயா.. இப்ப முடிஞ்சிரும்..||

 

~~சரி முடி.. எதையும் கெதி பண்றத்துல சோனகர் மெத்தவும் உசார்தான்..|| -பெரியவர் அரசியல்வம்புக்கு இழுத்தார். கதை கொடுத்தால் பண்டாரவன்னியன் தொடக்கம் பிரபாகரன் வரை அணிவகுப்பர்..

 

~~.........................|| நஸீர் பேசவில்லை. ஆனால் பெரியவர் விடவில்லை.

 

ந்த நாட்டுல பூர்விகம் எண்டால் அது இசக்கர் நாகர் என்ட தமிள் பேசின இனம் மட்டும்தான்.. தெரியிதே..சிங்களரும் விஜயன்ட வருகைக்குப் பிறகுதான் வந்திச்சினம்.. சோனகருக்கும் லங்கைக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.. நான் தந்த உவன் ~வால்ட் டய்லரி|ன் கட்டுரையைப் படிச்சனீர்தானே..?  அப்பிடி இருக்கேக்க அவரு உங்கட தலவரு அதென்னது.. ஙா.. பூர்விகம் பத்தி பார்ளிமெந்துல பேசப் போறாராமே.. என்ன பேசாம இருக்கிறீர்..என்னவெண்டாலும் சொல்லுமன்...|| பெரியவர் விடவில்லை..

 

~~இதுக்குப் பதில் சொல்ல ப்ப நேரமில்ல ஐயா..!|| நஸீர் சுருக்கமாக வெட்டினான்.

 

~~ஹிக்ககீய்.. ஏ.. என்னது..ஙா...ங்.. தனிஅலகு! ...  தனிஅலகு வேற வேணுமாம்.. ம்க்க்க்.. நல்ல பகிடியொண்டெல்லே இது..?||

 

      நஸீர் வாய் பேசவில்லை. எனவே.  பெரியவர்தன்பேச்சை தற்காலிக போர்நிறுத்தம் செய்தார். பெரிய மேசையில் உட்கார்ந்து முத்திரைக் கணக்குகளைச் சரிபார்க்க ஆரம்பித்தார்.

 

      திடீரென யன்னலில் ~~கிச்கிச்சென|| சத்தம்.. முதலில் ஒரு பட்டுப் பஞ்சு வால் தெரிந்தது. பின்னர் துள்ளித் திரும்பியதில் முதுகில் மூன்று கோடுகளுடன் சின்னக் கண்களால் எட்டிப் பார்த்தது அணில்.  இந்திக கண்களால் எச்சரித்ததை அது அலட்சியம் செய்து உள்ளே தாவி வந்தது. பெரியவரின் அருகே ஓடியது..~~ச்சூ..ய்ய்ய.|| என்று அதட்ட  அணில் பயத்துடன் ஒரே தாவலில் இந்திகவின் சீருடைப் பக்கெட்டினுள் தாவி ஒழிந்து கொண்டு பொட்டுக் கண்களால் எட்டிப் பார்த்தது.  அமைதி கலைந்த பெரியவர்

 

~~~உன்ர அணிலுக்குச் சிங்களம் தெரியுமே..?|| என்று தமிழில் கேட்டார்.

 

~~கொஞ்சம் கொஞ்சம் இயலும் ஸேர்..|| கேள்வியில் விருப்பமின்றிச் சிரித்தான்இந்திக.

 

~~எடடே.. மிருக சாதிக்கே சிங்களம் வெளங்குது.. இந்த உந்தச் சிங்கச் சாதிக்கு தமிள் விளங்கறயில்லையாம்.. உங்கட சோனகச்சாதிக்கு பாசைப் பிரச்சினயில்லையப்பு.. சிங்களவனோடச் சேர்ந்தா சிங்களம்.. தம்ளனோடச் சேர்ந்தா தம்ள்.. அரபுநாட்டுக்கப் போனால் அரபு..  உந்த வெசயத்துல சோனகரின்ர திறமையை பாராட்டத்தான் வேணுமப்பா.. சாதாரணமா மூணுநாலு பாசை தெரியுமில்லே.. சோனகருக்கு..?|| என்றார். நஸீர் பேசவில்லை. அதைப் பொருட்படுத்தாத பெரியவர்

 

      -~அடே நஸீர்.. இந்திக்க கேளுங்களடா.... ஒமந்த கேம்ப் எக்க  அபே கொட்டி அற்றாக் கரண்ட வெலாவட்ட...|| (ஓமந்தை கேம்ப்பை எங்கள் புலிகள் தாக்கும் போது...)... என்று புலிப்படைப் புகழ் பாடத் தொடங்கி  ஸ்ரீ போராட்டம் தொடக்கம் தரப்படுத்தல் சட்டம்... சிங்களம் மட்டும் சட்டம்... அதன் விளைவான தமிழர் பாதிப்புக்கள்.. அதன் தொடர்ச்சியான போராட்டங்கள்.. அது ஆயுதப் பேராட்டமாக உருவெடுத்த வரலாறு... என்றெல்லாம் தொடரவே நஸீரும் இந்திகவும் அணிலும் புன்னகைத்தபடி வேறுவழியின்றி வேண்டாவெறுப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

 

                                    0

 

      அணிலின் மரணம் தீர்மானிக்கப்பட்ட அன்று ஞாயிற்றுக் கிழமை தபாலகம் இரண்டுமணி நேரம்தான் திறந்திருக்கும். முக்கியமான  தபால்கள் கட்டப்பட வேண்டும். பெரியவரும் நஸீரும் இந்திகவும் மும்முரமாகவேலை செய்துகொண்டிருந்தனர். அணிலும் வெகு சுதந்திரமாக தபால் அறையில் ஒடித் திரிந்து கொண்டிருந்தது.

 

திடீரெனப்  பெரியவர் ஆரம்பித்தார்.

 

~~-நேத்து பீபிஸி கேட்டனீரே.. ..உம்மட தலைவருக்கு தனிமாநிலம் வேணுமாம். ஆடு அறுக்கிறத்துக்கிடையில அதுர புடுக்க அறுக்........அடச்ச்ச்ச..சே.. உந்;த அணிலப் பாருமன்.. ~மெய்ல்பேக்கு|க்குள்ளயெல்லே போய்ட்டுது.. கலையடாப்பா அத..||

 

~~~ஐயா சமைக்கல்லையா..?|| கேட்டான் நஸீர் மறுபடி தமிழரசியலுக்கு பெரியவர் வந்துவிடாதபடி..

 

~~- சமைக்கத்தான்.. இண்டைக்கு அசைவம்தான்.. நானும் உவன் இந்திகவும் கொஞ்சம் ~முஸ்;பாத்திஎடுப்பமெண்டு.... நில்லுமன் நீரும்.. இண்டைக்கு எங்களோட.. கொஞ்சம் ~ட்ரிங்க்எடுப்பமென்ன..?||

 

~~நான் குடிக்கிறல்லை ஐயா..  இண்டைக்கு நான் வீட்ட போயே ஆகணும்.. அய்யா.. தலைக்கு மேல வேல இருக்கு..||

 

~~மோமோம் தெரியும்.. தலைக்கு மேலயில்ல கீழதான் வேல இரிக்கும்.. சோனகர் என்ன இல்லாட்டாலும்இருப்பினம். ஆனா ........ ல்லாம இருக்கமாட்டினமெல்லே..சரி..சரி.. நீர் போறெதெண்டால் போம்.. என்ற பெரியவர்- இந்திகவிடம்..

 

இந்திக.. ரெட்ரம் தெக்க வைற் காலயக்.. பியர் எக்க .|| பெரியவர் இந்த விசயத்தில் மட்டும் கஞ்சத்தனம் பார்க்கமாட்டார். ஐநூறு நோட்டை விசிறிவிட்டு குவார்ட்டஸ் பக்கம் சென்றார்.

 

~~     இரண்டுமணியாகிவிட்டது. அம்பலாங்கொட தபால்வண்டி வந்துவிட்டது. தபாலைப் பாரம் கொடுத்து ஒப்பம் பெற்று  சகல கதவுகளையும் சாத்தித் தாளிட்ட நஸீர் திறப்;புக்களை எடுத்தக் கொண்டு ~குவார்ட்டஸ்பக்கம் வந்தான். சமையற்கட்டிலிருந்து  இறைச்சி பொரியும் மணம் ~கம்மெ|ன மணத்தது.

 

~~அய்யாட அசைவச்சமையல ஒரு நாளைக்கு ருசி பார்க்கனும் நான். ~தக்பீர்பண்ணிண இறைச்சி கொண்டு வாரன்.. ~ரோஸ்பண்ணுவீங்களா அய்யா..||

 

~~உதென்ன விசர்க்கேள்வி.. றச்சி ~ரோஸ்பண்றத்துல நான் ~கிச்சன்கிங்தெரியுமே..கொண்டாரும்..கொண்டாருமன்.. அதெல்லாம் வெகு ~ஸ்பெசலாக|ச் செய்வனடா.. றச்சி சமைக்க எனக்கு ஒரு காத்தான்குடிச் சோனகன்தான்பழக்கி விட்டவன்.. அருமையாச் சமைப்பானப்பா.. நான் காத்தான்குடியில... ஆயிரத்தி..||

 

~~ஆயிரத்தி அறுவத்தி ரெண்டு தடவ சொல்லிட்டீங்கய்யா.. நன்றிகெட்ட சோனகர் குவார்ட்டஸ்க்க புகுந்து சுட வந்திட்டினம் எண்டு.... |

 

~~அந்தா பாத்தியா..அதான் சோனகர்..!||

 

~~கறி என்னய்யா... மாடா..கோழியா.. இன்றைய ஸ்பெசல்..?||

 

~~ரண்டுமில்ல.. அணில்..

 

~~என்னது...என்னய்யா.. என்;ன இறைச்சி..?||

 

~~அணில்..! உவன் பியோன் இந்திகவின்ர லேணா..||றச்சி ரோஸ்ட்..||

 

      அதிர்ந்துபோய்விட்டான் நஸீர். இந்திக வளர்த்த அந்;த அணிலா..ச்சே என்ன மனிசன் இந்த ஆள்..ஆத்திரமும் அதிர்ச்சியுமாக நஸீர் படபடத்தான்.

 

~~என்ன அய்யா இது.. மோட்டுக்காரியம் பண்ணீங்கள்..?  அவன்ர அணிலயா கறி ஆக்குறது..இத அவன் அறிஞ்சால் எண்டால்...அறியத்தானே போகிறான்.. இப்ப சாராயம் எடுத்திற்று வந்து அணிலத்தானே தேடுவான்..இதுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீங்களோ தெரியா.. என்ன மடத்தனம் இது.. இத்தனைக்கும் அவன் அன்பா வளர்க்கிற அணிலயா... ச்சே..க்..!||

 

~~என்னப்பா பினாத்துறீர்..சோனகரும் தாம் அன்பா வளர்க்கிற ஆடு மாடுகளத்தானே வெட்டுகினம்.. அது பாவமில்லையே...?||

 

~~என்ன மடத்தனம்..!   அதுவும் இதுவும்ஒண்டா அய்யா..?||

 

~~வேறென்ன..எல்லாம் வாயில்லாத சீவராசிகள்தானே  ப்பு..?||

 

~~இப்ப இந்திக வந்தான் என்டால்..என்ன நடக்கும்..இங்க நடக்கப்போற கொலைக்கு நான் சாட்சியா இருக்க விரும்பல்ல.. திறப்பப் புடிங்க அய்யா.. நான் வீட்ட போறன்.. என்ன மடத்தனம் இது.. அவன்ட அணிலப் புடிச்சி... பாவம் புண்ணியம் பாக்காமக் கொண்டு.. ச்சே.. அய்யா.. கடசியா ச் சொல்றன்.. நீங்க இஞ்ச இருக்கிறது நல்லா இரிக்காது.. ~டக்கெ|ண்டு வெளிக்கிட்டு எங்கேயாச்சம் போங்க.. இல்ல என்னோட வாங்க.. அவன் இந்திகட  அண்ணண்மார் ஆமில இரிக்கான்.. அனுராதபுரத்துல அறுத்து ஒரு மாதமாகயில்ல.. ச்சே.. என்ன செய்யப் போறீங்க  அய்யா..?||

 

      பெரியவர் ஒரு குறுஞ்சிரிப்படன் அதி நிதானத்துடன் சொன்னார்.

 

~~இண்டைய சாராயத்க்கு  ~றச்சிரோஸ்|தான் ~பைற்வேண்டுமென்று அவன்தான் கேட்டவன். இப்ப அவசரத்துக்கு மாடு ஆடு தேடேலுமே... உதுதான் வசதியா அகப்பட்டுது.. நீர் விரும்பினா நில்லும்.. இல்லாட்டால் உன்ர பெண்டிலுட்ட ஓடுமன்..||

 

      நஸீர் பதற்றத்துடன் சட்டென்று திரும்பி வெளியே வந்தான்.. தன் கைப்பைகளை எடுத்துக் கொண்டு வேகமாக மருதமரத்தைக் கடந்த போது இந்திக..  மனம் பயத்தில் துணுக்குற்றது.  இந்திக கையில் தபாற்பைக்குள் மூன்று சாராயப் போத்தல்களை மறைத்துக் கொண்டு  ஒரு ~டிபிடிப்பக்கட்டை எடுத்து மருதமரத்திடம் காண்பித்து..~~சிக்கூ.....ஸ்...என்று விசிலடித்தான்.. பதிலளிக்க யாருமில்லை..  மீண்டும்  கூப்பிட்டுப் பார்த்தான். அணில் வெளிவரவில்லை..   ~

 

~ஙா..ஙா.. வடகினினம் எனவாந் நே..வலமுவலமு..|| (பசியென்றால் வருவாய்தானே பார்ப்போம்.. பாhப்போம்..!!)  ;என்று கறுவியபடி ஒரு சிறு கல்லைப் பொறுக்கி அணில்ப் பொந்தை நோக்கி எறிந்து விட்டு உல்லாசமாகச் சீட்டியடித்தபடி குவார்ட்டஸ் பக்கம் சென்றான்..

 

;.      நஸீர் பயத்துடன் குறுக்குக் கிறவல் பாதையில் இறங்கி விரைந்தான்..

 

0

      எல்லைகளில்லாத கொலைக் கற்பனைகளுடனும்.. அதீத கலவரத்துடனும் பிரயாணம் செய்து இரவு சரியாக எட்டரைக்கு வீடு வந்த சேர்ந்த நஸீர் உடனடியாகப் பரபரப்புடன் அலிகன்முல்ல  தபாற்கந்தோருக்கு தொலைபேசி எடுத்தான். நெடு நேரமாக மணி அடித்துக் கொண்டிருந்தது.  மனம் பதைபதைத்தது. அலிகன்முல்ல பொலிசுக்கு அறிவிப்போமா என்று யோசித்தான். திடீரென தொலைபேசி மணி அடித்தது.. பரபரப்புடன் எடுத்தான்.

 

~~ஹெல்லோ.. ஙா.. நஸீர்.. ப்ப நீர் கோல் எடுத்தனீரே..?|| பெரியவரின்;  சற்றே போதை கலந்த குரல்.

 

~~அய்யாவா..?  நான்தான் எடுத்தனான்.  நீங்க உயிரோட இருக்......||

 

~~நான் சாகுறத்தில்  உந்தச் சோனகருக்கு அவ்வளவு விருப்பமே..?||

 

~~ல்லை  அய்யா.. அவன் இந்திக தன்ர அணில....||

 

~~உன்ர கற்பனப் புத்திய கதையள் எழுதறத்தோட நிப்பாட்டப்பு.. உது இந்திகவின்ர நான் ~ரோஸ்பண்ணின ஆறாவது அணில் தெரியுமே...அந்தா சட்டியோட வழிச்சிவழிச்சி விழுங்கிற்று விழுந்து கிடக்கிறானடா பாவி..மோனே...!||0 (1998)

 

No comments:

Post a Comment