Sunday, August 19, 2012

உள்ளடக்கங்கள்

வல்லமை தாராயோ ....
உள்ளடக்க விபரங்கள்





வல்லமை தாராயோ ....

 

சிறுகதை தொகுதி

 

என். . தீரன். (ஆர்.எம். நௌஸாத் )

 

2000 மே - மாதம்

 

வெளியீடு-

கல்முனை புகவம்

(புதிய கலைஞர் வட்டம் )

 

பிரிண்டர் --

அந்-நூர் கிராபிக்ஸ் - கல்முனை

 

பக்கம்-

10+74-84

 

விலை --

90 ரூபாய்

 

 

 

சமர்ப்பணம்

 

கீர்த்திமிக்க காரியப்பர் பரம்பரைக்கு இது சமர்ப்பணம்

 

 

உள்ளடக்கம் 08 சிறுகதைகள்

 

1- அணிலே அணிலே ஓடி வா

 2- நல்லதொரு துரோகம்

3- மலர்வு 74 உதிர்வு 98

4- e= ஓம்

5- சாந்தி

6- கனவுப் பூமி

7- ஜீனத்

8- இலகிமா


00

அறிமுகவுரை-

எஸ்.எம்.எம். றாபிக்   jp

(தேசிய ஒருங்கிணைப்பு சமாதானக் கல்வி அதிகாரி - கல்முனை )



இது ஒரு சிறிய அறிமுக உரைதான். நூலாசிரியர் பற்றி அறிய ஒரு சிறு ஆர்வம் இருக்குமே.. அதற்காக இது.

‘வல்லமை தாராயோ’ என்னும் இச்சிறுகதைத் தொகுதியை அளிக்கும் என்.ஏ. தீரன் என்னும் ஜனாப். ஆர்.எம். நவ்ஷாத் காரியப்பர் கல்முனை புகவம் அமைப்பின் செயலர். 1980 – 1989 வரை தூது கவிஏடு பதினாறு இதழ்கள் வெளிக் கொணர்ந்தவர்.1993 ல் வெளியான ஈழத்தின் முதல் ஹைக்கூ கவி இதழான ‘புள்ளி’யில் இணையாசிரியர்.

ஏராளமான வானொலி நாடகங்கள், ‘காகித உறவுகள்’ நாடகத்துக்கு தினக்குரலும், பிரான்ஸ் தமிழ் ஒலிபரப்பு நிலையமும் இணைந்து ரூபா இருபதினாயிரம் பரிசளிப்பு, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சங்கீத நாட்டிய சங்கம் சிறுகதைப் போட்டியில் முதலிடம் பெற்றமைக்காக தங்கப் பதக்கம் அளித்தது.

தொழிலால் தபால் அதிபரானவர். ஓரிறை உபாசகர், மானுட நேசகர், எப்போதும் இலக்கிய வாசகர்.

கல்முனை புகவம் வெளியீடாக வரும் இச்சிறுகதைத் தொகுப்பிலுள்ள ஆறு கதைகள் சிறுகதைப் போட்டிகளில் பரிசில்கள் பெற்றவையாகும். இவற்றையும் மிஞ்சிய கனதியும் காத்திரமுமிக்க சிறுகதைகளை இவர் படைக்க வேண்டும் என்பது எனது கருத்தாகும்.

வாசகர்களின் அபிப்பிராயமே உண்மையான விமர்சனமாகும்’ என்று அறிஞர் சுமஹோட் கூறியிருப்பதனால், வாசகர் அபிப்பிராயங்களை எதிர்பார்க்கிறேன்.

324 அலியார் வீதி, கல்முனை-6

௦௦௦

 திருமுகவுரை

.பீர் முகம்மது.   B.A. Dip.in edu. SLEAS.

 (கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை அதிபர் )

2000.04.03

11.45. pm.

 அன்புடன் தீரனுக்கு,

 தங்கள் சுகத்துக்கு  இறைவனிடம் விண்ணப்பம். ‘வல்லமை தாராயோ..’ என்ற சிறுகதைத் தொகுப்பு  எனது பார்வைக்கு கிடைத்தது. நன்றி.

 முதலில் நுனிப்புல்  மேய்ச்சலாகவும் பின்னர் நுணுக்கமாகவும்  வாசித்ததால் ஏற்பட்ட எனது கருத்துகளை  மடலாக இங்கு எழுதுகிறேன்இது நீண்ட கடிதம்  என்று நினைத்தால்  மன்னிக்கவும்.

 

‘வல்லமை  தாராயோ’ என்ற தங்களின் இந்த நூல் சிறுகதைத் தொகுப்பொன்றின் சகல தாரதம்மியங்களையும் கொண்டுள்ளதா..? சமுகத்தின் சகல பிரக்ஞைகளையும் அது வெளிக் கொணர்ந்துள்ளதா..?  இது போன்ற பல கேள்விகள் என்னுள் எழுந்தன..  ஆனால், நான் தங்களின் நூலை  ‘ஸ்கேனிங்’ செய்து பார்க்கவில்லை.  பார்க்க வேண்டிய அவசியமும் எனக்கு இருக்கவில்லை.  சாதாரண ஒரு வாசகனின் பார்வையில்  எதுவெல்லாம் தோற்றம் பெறுமோ  அந்த நிலைப்பாட்டில் நின்றே இதனைப் பார்த்தேன்.

 அது சரி.. சிறுகதை எழுதும் இந்த ஆற்றலை அல்லது வல்லமையை  நீங்கள் எப்படிப் பெற்றீர்கள்.. என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சாதாரண ஒரு எழுத்தாளராக மட்டுமே  உங்களைக் கண்ட எனக்கு  உங்களின் திறமை  என் தராசுத் தட்டுக்கே தண்டனை கொடுத்தது.

 எட்டுக் கதைகள் எண்ணிக்கையில்.  ஆனால், அவை ஒவ்வொன்றும் சிறுகதை உலகுக்குச் சீதனம்தான்.

 ‘அணிலே, அணிலே, ஓடிவா..’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட  சிறுகதை என்னை மிகவும் கவர்ந்தது.  அதில் காணப்படும் பாத்திரங்கள்  நிஜமானவை மட்டுமல்ல  உயிரோட்டமுள்ள பாத்திரங்களும் ஆகும்.  நீங்கள் ஒரு தபாலதிபர் என்ற வகையில்  அனுபவத்தைக் கதையாகப் பீய்ச்சியுள்ளீர்கள்..

 நமது ‘தேசிய இரத்த நீரோட்டத்தின்’ பின்புலங்களை  வாழைப்பழத்தில் ஊசி ஏற்றிய பாங்காக விளக்கியுள்ளீர்கள். இந்த அணில் கதை பற்றியும்  ‘மலர்வு:74  உதிர்வு:98 ‘  என்ற கதை பற்றியும்  உங்களுடன் நேரிடையாக  கலந்துரையாடலாம்  என்றிருக்கின்றேன்..

 ஏனெனில் இவ்விரு கதைகளும்  என்னை மிகவும் கவர்ந்தவை.  தீரன் அவர்களே,  நீங்கள் எழுதிய கதைகளில்  உங்களுக்குப் பிடித்தமான கதைகளை எனக்கு அனுப்பி வையுங்கள்..  உங்களுடன் கலந்துரையாட மிக விருப்பம்.

 இந்த மடலில் நான் இன்னொரு விடயத்தையும்  தொட்டுக் காட்டுதல் சிறப்பு  என நினைக்கின்றேன்.

 ‘கனவுப் பூமி’ கதை இருக்கின்றதே  அது அபாரம்.  இன்னும் சில வருடங்களில்  அது நிஜமாகிவிடும்  அணில் கதைக்கு  அனுபவம் இருந்தது..  கனவுப் பூமிக்கு கற்பனை எங்கிருந்து வந்தது..?

 சாதாரணமாக  சிறுகதை என்ற பெயரில்  ‘சிறுசிறு’ கதைகளை எழுதும் ‘நம்மட ஆட்களுக்கு’ மத்தியில்  உங்கள் கதைகள் தனி முத்திரைதான்.  கனவுப் பூமியின் மூலம்  நீங்கள்   ஓதர் சி.கிளார்க் (ஆதர் என்பது இந்தியத் தமிழா?) ஆகிவிட்டீர்கள்.

 ‘நல்லதொரு துரோகம்’ கதையும் பரவாயில்லை.  வழமையான கதைதான்.  ஆனால் இராணுவப் பூச்சு. ‘மலர்வு 74 உதிர்வு.98’  என்ற கதைக்கும்,  இதே தலைப்பை இட்டுப் பார்த்தேன்.  நீங்களும் அவ்வாறு யோசித்துப் பாருங்கள்..

 ‘சீனத்’ கதையில்  நீங்கள் கண்ட பாத்திரங்களும்,  அவர்களின் உரையாடல்  மொழிகளும்  சரளமாக உண்மைகளைத் தெரிவிக்கின்றன..  ஆனால், என்ன செய்ய..?  நீங்களும் நானும் வாய் மூடி மௌனிகளாக இருக்க வேண்டியதுதான்.  ஏனென்றால்,  சிறுகதைகளால் ஒரு சமுகம் திருந்த முடியுமென்றால்,  நாம் சிறுகதைகளை எழுத  ஆரம்பிக்க முன்னரேயே  சமுகம்  திருந்தியிருக்கும்.

 ‘E=ஓம்’ என்ற கதையின் பாத்திரங்கள்,  ஈருலகத் தொடர்பைக் கொண்டிருப்பதாக  அல்லது விஞ்ஞானமும்,  மெய்ஞ்ஞானமும்  ஒன்றாகியிருப்பதாக  எனது உணர்வு. இது போன்ற கதைகளில்,  நீங்கள் சொல்லும் விடயங்கள்,  சற்று ஆழமானவை போல தெரிவதால்,  ‘அதீத கதைகளா’கவே  அவற்றை நாமம் பொறிக்க வேண்டியுள்ளது.  ஆனால் கதைகளில் தரம் தெரிகிறது.

 ‘சாந்தி’’ என்ற கதை  பிரச்சினைக்குரிய ஒரு விடயத்தை  தொட்டு நிற்கின்றது.  குழந்தைக்குப் பெயர் வைக்கும் விடயத்தில்  மனையுடன் எதிர் உணர்வு கொள்ளும்  கணவனின் வாதம் வெறும்  குதர்க்கவாதம்தான்.  ‘கீத் கேண்டில்  மைன்ஸ் வேக்ஸ்’ (Keyத் கெண்டில் – Wax)  சமன் சாவித்திரி  என்ற தேற்றத்தின் அடிப்படையில்  வாதம் முன் வைக்கப்படுகிறது.  எது எப்படியிருந்தாலும்  கதையின் கடைசி வரி  யதார்த்தத்தின் யதார்த்தமாகவுள்ளது.  அதுதான் உங்களின் ஆளுமை.

 அன்புள்ள தீரன் அவர்களே ,

எட்டுக் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து புத்தகமாக்கியுள்ளீர்கள்.  அதுவும் அநேகமானவை  பரிசு பெற்ற கதைகள் என்று நினைக்கின்றேன். உங்கள் கதைகளுக்கு பரிசு  தந்தவர்களைப் பாராட்டத்தான் வேண்டும்.  ஏனென்றால் நல்ல கதைகளுக்கு  பரிசு கொடுத்ததாக அவர்கள் பாராட்டப்படுவார்கள்.

 நேற்று உங்களைத் தேடி வந்தேன்.  தங்கள் வீட்டில் தகவலும் கொடுத்தேன்.  இந்த நூற்றாண்டின் இனிய  நாள்கள்  ஒவ்வொன்றும்  உங்கள் பேனாவைத் திருடிக் கொள்ள திட்டங்கள் போடும்.  கவனமாகவிருந்தால் காற்றும் உங்களுக்கு கடிதம் போடும்,

 விடுதலை உணர்வுக்கு  விண்ணப்பம் செய்யும் கதைகள்  பற்றியும் கவனம் செலுத்துங்கள்.  வானத்தில் பிரகாசிக்கும்  வண்ணவண்ண நட்சத்திரங்கள் போல்  உங்கள் எழுத்து வாழ்க்கை  பிரகாசிக்க  எனது வாழ்த்துக்கள்.

 

அன்புடன்,

ஏ. பீர்முகம்மது

அதிபர், சாஹிரா தேசிய கல்லூரி .

 

 

 

 

 

 

 

 

நன்றிமிகுவுரை

 

௦- இலங்கை சூழல் பத்திரிகையாளர் சங்கம்

௦- சிரிபாலபுற மாத்தையா (சிறுகதை தொகுப்பு)

௦- கீதம்

௦- பேராதனைப் பல்கலைக் கழக சங்கீத நாட்டிய சங்கம்,

௦- தினக்குரல்

௦- மின்னல்

௦- சரிநிகர்

௦- இதயம்

௦- தினகரன்

௦- பிரான்ஸ் தமிழ் ஒலி நிறுவனம்

௦- இலங்கை வானொலி (முஸ்லிம் சேவை)

௦- .பீர் முகம்மது.   B.A. Dip.in edu. SLEAS.

 (கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை அதிபர் )

௦- அல்ஹாஜ். எஸ்.எல்.  கலீல் ரஹ்மான்  ஜே.பி.

௦- ஜனாப். எஸ்.எம்.எம். றாபீக்  ஜே.பி.

(தேசிய ஒருங்கிணைப்பு சமாதானக் கல்வி அதிகாரி)

௦- அல்ஹாஜ். எம்.எஸ். புஹாரி .   B.A. Dip.in edu.

௦- திரு. எஸ், மனோகரன் (பிரதம தபாலதிபர்)

௦- ஜனாப். அஹமத் றிபாய் காரியப்பர்

௦- திரு. கே. சிவகுமார்

௦- ஜனாப். எம்.வை. நஜீப்கான்

மற்றும், நண்பர்களுக்கும்,  விசேடமாக என் உயிரினும் மேலான பெற்றோருக்கும்

 

 



No comments:

Post a Comment