Wednesday, July 22, 2015

விமர்சனம்- தேனீ.




விமர்சனக் குறிப்பு


தினக்குரல். வாசகர்சாலை

நூல்- வல்லமை தாராயோ
நூலாசிரியர்- தீரன். ஆர்.எம். நவ்சாத்
விலை 90—

எட்டுச்சிறுகதைகள் அடங்கிய ஒரு தொகுப்பு இந்நூல். இவை சமுகம் தத்துவம் விஞ்ஞானம் என வேறுபட்ட தளங்களில் வேர் கொண்ட கதைகள். இந்த பல்லினத் தன்மை முழுமையான நோக்கில் நூலுக்கு ஒரு தனித்துவத்தை தருகிறது.


இங்குள்ள கதைகளுள் ஈ சமன் ஓம் கனவுப் புமி ஆகிய இரண்டும் விஞ்ஞானச் சிறுகதைகள். ஈ சமன் ஒம் சிறுகதை மெய்ஞானத்துக்கும் விஞ்ஞானத்துக்கும் சக்தி என்ற நிலையில் வைத்து முடிச்சுப் போடுகிறது. கனவுப்புமி காலமென்னும் சமுத்திரத்தில் மானுடம் நடத்தும் ஒரு சுழியோட்டத்தினது சித்தரிப்பு. இவை இரண்டும் விஞ்ஞானச் சிறுகதைகள்.. என்ற வகையில் தமிழ்ச் சிறுகதைத் துறைக்கு புதுமை தரும் வரவுகள்..அவ்வளவுதான்..

சாந்தி என்னும் கதை இருவேறுநிலைப்பட்ட சிந்தனைகளின் சந்திப்பு.. இல்லை..சமர். ஆசிரியரின் சிந்தனையும் வேகமும் மொழியின் ஆற்றலும் பளிச்சிடுகிற கதை.

இத்தொகுதியில் உள்ள கதைகளுள் நல்லதொரு துரோகம்ää மலர்வு74 உதிர்வு98. இலகிமா ஆகிய மூன்றும் முன்னணியில் நிற்கின்றன. இவற்றுள் முதலிரண்டு கதைகளும் நமது இன்றைய சமுதாய யதார்த்தத்தின் பயங்கரங்கள். ஆசிரியரது துணிச்;சலான சித்தரிப்புகள்.. பிச்சைக்காரன் ஒருவனை அவன் பித்தனா சித்தனா என்று ஆராய்கின்ற நுணுக்கமான தேடல். இந்தக் கதை… ஞானச்சிந்தனைகளின் தளத்தில் இன்றைய அளவுகளின் துணையுடன் நடைபெறுகின்றது இந்தத் தேடல்.

அணிலே அணிலே என்னும் கதையில் வாசகனது அறிதலுக்கான ஒரு கேந்திரத்தை கதைக்குப் பின்னணியில் சமத்காரமாக வைத்திருக்கிறார் ஆசிரியர்.

விஞ்ஞானம் தத்துவம்ää சமுகம் ஆகிய கருத்துநிலைகள் கைகோர்த்து ஆங்காங்கு வந்து கதைகளுக்கு செழுமையுட்டுகின்றன.

நறுக்குத் தெறித்தாற்போன்ற மொழிநடைää ஆசிரியருக்குள்ள பல்துறைப் பரிச்சியம் கொண்ட அறிவு ஆகியவை சேர்ந்து உண்டாக்கும் வலுவும் வளமும் இங்குள்ள கதைகளுக்கு பரிமளிப்பைத் தருகின்றன..

இந்நூலில் உள்ளனவற்றில் ஆறு கதைகள் பல்வேறு போட்டிகளில் பரிசு பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நூலுக்கும் அதன் நாமத்துக்கும் உள்ள தொடர்பு…? பொருத்தப்பாடு…?

தேனீ.

Sunday, July 19, 2015

நூலின் சில பக்கங்கள்

நூலின் சில பக்கங்கள் 
















ஊடக தகவல்கள்

விமர்சனங்கள்- குறிப்புகள்


2000. ஆகஸ்ட்.13 (நவமணி)

நமது மண்ணின் இன்னொரு நீரூற்று.---
(உமா வரதராஜன்.)

00
2000. ஜூன். (தினகரன்.)
வேறுபட்ட சிறந்த எழுத்தாளர்.---
(ஏ. பீர்முஹம்மது.)

00
2000. ஜூலை.16 (தினகரன்.) ~
வல்லமை தாராயோ..? | நூலறிமுக விழா புகைப்படம்.

00
2000 மே. 6 (தினக்;குரல்.)
வல்லமை தாராயோ- நூல்விமர்சனம்.---
(தேனீ)

00
2000.மார்ச்.25 (தினகரன்.)
வல்லமை தாராயோ- நூல் வெளியீடு- செய்தி.
00